Thalaivar 170 Cast: ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தில் அமிதாப் பச்சன் இணைந்து நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.


ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தில் அமிதாப் பச்சன் இணைந்து நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.


அண்மையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.500 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள லால் சலாம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே, ரஜினி நடிக்கும் தலைவர் 170 மற்றும் 171 படங்களில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


 சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படத்தை இயக்கி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்ற த.செ.ஞானவேல் ரஜினியின் 170வது படத்தை இயக்குகிறார். படத்தை லைகா தயாரிக்க இருப்பதாகவும், ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினிக்காக மீண்டும் அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ரஜினி நடிக்கும் ’தலைவர் 170' படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்இடையே படக்குழு குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு வருகிறது. 


அந்த வகையில், நேற்று தலைவர் 170 படத்தில் துஷாரா விஜயன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், நடிகை ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி இணைந்துள்ளதாகவும் லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து இன்று ரஜினியின் தலைவர் 170 படத்தில் ஃபகத் பாசில் இணைந்திருப்பதாக லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ரஜினி மற்றும் ஃபகத் பாசில் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. அதை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் மற்றுமொரு மாஸ் நட்சத்திரமான அபிதாப் பச்சன் இணைந்திருப்பதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 






 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். இரண்டு உச்ச நட்சத்திரங்கள், சூப்பர் ஸ்டார்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே, 70களில் நண்பர்களாக இருந்த ரஜினி, அமிதாப் பச்சன் ஹம் மற்றும் அந்த கனூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது. 3 சகாப்தத்திற்கு பிறகு இரு சூப்பர் ஸ்டார்களையும் மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க: Thalaivar 170 Update: போடு... தலைவர் 170இல் இணைந்த ஃபஹத் பாசில்... ரஜினிக்கு வில்லனாக கலக்குவாரா?