Thalaivar 170 Update: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170வது படத்தில் நடிகர் ஃபகத் பாசில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தலைவர் 170:


நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சமீப காலமாகவே ரஜினி படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வந்தது. இதனை தொடர்ந்து ஜெயிலர் படம் ரஜினிக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துள்ளது. இப்படம்  வசூல் சாதனையை குவித்துள்ள நிலையில், அடுத்த படமான ’தலைவர் 170' படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூரியாவின் 'ஜெய் பீம்' படத்தை இயக்கி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்ற த.செ.ஞானவேல் ரஜினியின் 170வது படத்தை இயக்குகிறார்.


அடுத்தடுத்து குவியும் அப்டேட்டுகள்:


இந்நிலையில், 'தலைவர் 170’ படத்தின்  படக்குழுவினரை அக்டோபர் 1ஆம் தேதி முதல் வரிசையாக அறிவித்து வருகிறது. லைகா நிறுவனம் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை  அதிகரித்துள்ளது. முதலில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் டி.ஜே.ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தனித்தனியே  அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று லைகா வெளியிட்ட அப்டேட்டில், துஷாரா விஜயன் தலைவர் 170-ல் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பாகுபலி புகழ் ராணா டகுபதி ஆகியோர் இணைவதாக லைக்கா ப்ரொடக்ஷன் அறிவிப்பை வெளியிட்டது.


ரஜினியுடன் ஃபகத் பாசில்:






அதனை தொடர்ந்து இன்று லைகா வெளியிட்ட அறிவிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170வது படத்தில் நடிகர் ஃபகத் பாசில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  'மாமன்னன்' படத்தில் ரத்னவேலுவாக மிரட்டியிருக்கிறார் பகத் பாசில். இந்த படத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிர்கள் குவிந்தனர். இதனை தொடர்ந்து, தற்போது, ரஜியின் 170வது படத்தில் இணைந்துள்ள நடிகர் ஃபகத் பாசில், வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  உண்மை சம்பவங்களை மையாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் போலி என்கவுண்டர்களை எதிர்த்து போராடும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Cool Suresh: “என்னோட வேட்டியை கொடுங்க பிக்பாஸ்” .. கேமராவிடம் கெஞ்சிய கூல் சுரேஷ்.. வீடியோ இதோ..!