2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் வேதாளம். இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்த நிலையி, அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். அண்ணன், தங்கை பாசத்தை கூறும் ஆக்‌ஷன் படமான வேதாளத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்திருந்தார். இவர்களை தவிர, கோவை சரளா, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் வேதாளத்தில் நடித்திருந்தனர். 


படத்தின் இடம்பெற்றிருந்த ஆலுமா டோலுமா பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் அஜித் நடித்த வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்து தற்போது இந்தப் படத்தில் தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னாவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். 


நாளை ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசாக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக தெலுங்கில் நாளை மறுநாள் வேதாளம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வந்த அதன் இயக்குநர் மெஹர்ன் ரமேஷ் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். வேதாளத்தின் ரீமேக் குறித்து பேசிய மெஹர் ரமேஷ், அஜித் நடித்த வேதாளம் கிரிஞ் படம் எனப் பேசியுள்ளார்.


வேதாளத்தில் அஜித் நடித்ததை விட ரீமேக்கில் சிரஞ்சீவி சிறப்பாக நடித்துள்ளதாகவும், வேதாளத்தை விட வித்தியாசமான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மெஹர் ரமேஷின் இந்தப் பேச்சைக்  கேட்ட அஜித் ரசிகர்கள், வேதாளம் கிரிஞ் படமாக இருந்தால் அதை ஏன் ரீமேக் செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில், அஜித் ரசிகர்களின் செயலால் அதிர்ச்சி அடைந்த மெஹர் ரமேஷ், ட்விட்டர் பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், 2015ஆம் ஆண்டு வெளிவந்த வேதாளம் தனக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும், அண்ணன் - தங்கை பாசத்தை கூறும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தை பார்த்து ரசித்ததாகவும், அதை தெலுங்கு ரசிகர்களுக்கு ரீமேக் செய்து காட்ட விரும்பியதாகவும் தெரிவித்தார். 




மேலும் 2009ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லாவை டார்லிங் பிரபாஸை வைத்து ரீமேக் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மெஹர் ரமேஷின் இந்த ரியாக்‌ஷனை பார்த்த அஜித் ரசிகர்கள், அந்த பயம் இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். 


துணிவு படத்திற்கு பிறகு தற்போது அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் இயக்க உள்ளது. இதில் த்ரிஷா, அர்ஜூன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும் படிக்க: Jailer: நாளை ஜெயிலர் படம் ரிலீஸ்.. திடீரென வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்..ரஜினி ரசிகர்கள் ஷாக்..!