நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்தியேன் வீடியோ ஒன்று வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 


ஜெயிலர் படம் 


சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில்  தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். 


சிவகார்த்திகேயன் வீடியோ


ஒட்டுமொத்த திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம். காஷ்மீரில் என் படத்தோட ஷூட்டிங் இரவு, பகலா போய்கிட்டு இருக்கதால இந்த வீடியோ தாமதமாக வெளியிடுறேன். மாவீரன் படம் வெற்றிகரமாக 25வது கடந்து ஓடிகிட்டு இருக்கு. இவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி, பாராட்டு தெரிவித்த அனைத்து பிரபலங்களின் ரசிகர்கள், அனைத்து மாநில ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் என் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாவீரன் படம் பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்தார். இது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் உற்சாகமாக இருந்தது. குறிப்பாக எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்துச்சு. அவர் மாவீரன் ரிலீஸ் அப்ப  ஊர்ல இல்லை, ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி, பட வெளியீடு என பிஸியான நேரத்தில் ரஜினி பார்க்காமல் மிஸ் ஆகிடுமே ஃபீல் பண்ணேன். 






ஆனால் இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் மாவீரன் படம் பார்த்து பாராட்டினார். எனக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். “தலைவா யூ ஆல்வேஸ் கிரேட்” . என்கிட்ட ரஜினி, “சிவா ரொம்ப சிறப்பா இருந்துச்சு. நீங்க சிறப்பா நடிச்சிருந்தீங்க. கதை வித்தியாசமா இருந்துச்சு. நீங்களும் வித்தியாசமா தான் கதை பிடிக்கிறீங்கல” என சொன்னார். எனக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருந்துச்சு. ரொம்ப நன்றி தலைவா. 


வாழ்த்த வயதில்லை தலைவா


நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். அதை எத்தனை முறை கேட்டாலும், எப்ப கேட்டாலும் சொல்லுவேன். உங்களை பார்த்து சினிமாவுக்கு வந்தவன். உங்கள் படத்துக்கு பேனர் வைத்து சினிமாவை கொண்டாடியவன். அப்படி ஒருத்தனுடைய படத்தை பார்த்து விட்டு பாராட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று தான். எப்போது நீங்க போன் பண்ணாலும் அப்படித்தான் இருக்கும். 


நாளைக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் நாள். ஜெயிலர் படம் வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரித்திரத்தில் இன்னும் ஒரு சிறப்பான நாளாகம் இருக்கும். தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம். என்றும் உங்கள் ரசிகன். இன்னும் நீங்கள் எங்களை மகிழ்வித்து கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் உங்களை கொண்டாடி கொண்டே இருக்க வேண்டும். ஒட்டுமொத்த ஜெயிலர் படத்துக்கும் என் வாழ்த்துகள் என சிவகார்த்தியேன் தெரிவித்துள்ளார்.