Seetha Raman :சிக்கிய சுபாஷ்.. மகாவை தீர்த்து கட்ட நடக்கும் சதி; சீதா கொடுத்த வார்னிங் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா அக்கவுண்ட்ஸ் பார்க்க மீரா அவளுக்கு உதவியாக ஆபிஸ் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

அதாவது, சீதா மும்மரமாக அக்கவுண்ட்ஸ் பார்ப்பதாக மேனேஜர் சொன்ன விஷயத்தை கேட்டு மகாவும் அவளது டீமும் வந்து பார்க்க மீரா சீதாவுடன் இருப்பதை பார்த்து ஷாக் ஆகின்றனர், உள்ளே வந்து மீராவிடம் நீ என்ன பண்ற என்று கேட்க சீதாவுக்கு ஹெல்ப் பண்றேன், ஒரு வருஷமா நிறைய திருட்டு வேலை நடந்திருக்கு என்று சொல்ல சுபாஷ் அர்ச்சனா ஷாக் ஆகின்றனர்.

அதன் பிறகு சீதாவும் மீராவும் அக்கவுண்டை முழுமையாக பார்த்து முடிக்க 1 கோடி ரூபாய் வரை பிராடு வேலை நடந்திருப்பதாக சொல்ல மகா அதிர்ச்சி அடைகிறாள். அக்கவுண்ட்ஸ் பொறுப்பை கவனித்து வந்த சுபாஷையும் அர்ச்சனாவையும் கூப்பிட்டு எப்படி அவ்வளவு பணம் காணாமல் போச்சு? நீங்க தான் அந்த பணத்தை திருப்பி கொண்டு வரணும் என ஷாக் கொடுக்கிறாள்.

வீட்டிற்கு வந்த சுபாஷ் புல்லாக குடித்து விட்டு என் அண்ணன் ஆபிஸில் இருந்து பணத்தை எடுக்க எனக்கு உரிமை இல்லையா என புலம்பி கல்பனாவிற்கு போன் செய்து இந்த மகாவை சும்மா விட கூடாது என்று சொல்ல கல்பனா தன்னிடம் ஒரு பிளான் இருப்பதாக சொல்கிறாள். அடுத்து மகா என்ன நடந்திருக்கும்? எப்படி இது நடந்திருக்கும் என யோசித்து கொண்டிருக்க கீழே வரும் சீதா இந்த திருட்டு வேளையில் உங்களுக்கும் பங்கு இருக்கா? என்று கேட்க மகா கோபப்படுகிறாள்.

உங்க அக்கா இறப்பில் உங்களுக்கும் சம்மந்தம் இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும், எல்லாத்தையும் வெளியே கொண்டு வராமல் விட மாட்டேன் என வார்னிங் கொடுக்க மகா ஷாக்காகி நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்கும்

Siragadikka Aasai: மலேசியா மாமா பஸ்ஸில் வராறா? வாய் விட்டு மாட்டிக்கொள்ளும் ரோகினி! - இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

Sandhya Ragam: உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த மாயா.. முடிவை தீர்மானிக்கும் மக்கள் - ஜீ தமிழில் அடுத்த அதிரடி அறிவிப்பு.!!

 

 

 

Continues below advertisement