தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.
இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சந்தியாவின் மறைவுக்குப் பிறகு மாயா விருப்பமின்றி ஜானகி வீட்டிற்கு வந்தாள். தனத்துக்காக உதவ போய் ரகுராம் வீட்டை விட்டு அனுப்ப முடிவு செய்த நிலையில் ரமணிக்கு உண்மைகள் அனைத்தும் தெரிய வந்து மாயாவின் வெளியேற்றத்தை தடுத்த நிறுத்தினார்.
இதையடுத்து மாயாவை தனம் படிக்கும் கல்லூரியில் சேர்த்துள்ள நிலையில் அங்கே ஆடை கட்டுப்பாடு குறித்த கருத்து மோதல்கள் உருவாக மாயா ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் உட்காருகிறாள். ஒரு கட்டத்தில் மாயாவுக்கு ஆதரவாக சக மாணவிகளும் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
இந்த விஷயம் ரகுராமுக்கு தெரிய வர அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மாயாவின் இந்த எழுச்சி போராட்டம் சரியானது தான் என்று நீங்கள் நினைத்தால் 8657865733 என்ற எண்ணிற்கும் தவறு என நினைத்தால் 8657865734 என்ற எண்ணிற்கும் மிஸ்டு கால் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு என்பது போல மக்கள் சொல்லும் முடிவு தான் ரகுராமின் முடிவாக சீரியல் கதைக்களத்தில் அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்புறம் என்ன ரசிகர்களே சந்தியா ராகம் சீரியலின் அடுத்தகட்ட பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்.
மேலும் படிக்க