Seetha Raman: சுபாஷை சுட வந்த மர்ம நபர்.. ராம் செய்ய போவது என்ன? சீதா ராமன் சீரியல் அப்டேட் இதோ!

சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் சுபாஷை சுட முயற்சிக்க இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

சுபாஷும் அர்ச்சனாவும் பயந்து சத்தம் போட ராம் ஓடி வர அந்த மர்ம எஸ்கேப் ஆகி விடுகிறான். சுபாஷ் மரண பயத்தில் இருக்க சீதா போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்கிறாள். சுபாஷ்க்கு பணத்தை கொடுக்காததால் ரவுடி இப்படி செய்திருக்கனும் என நினைத்து அவனுக்கு போன் செய்கிறான்.

ரவுடியிடம் நீ தான் கொல்ல ஆள் அனுப்பினியா என்று கேட்க பணத்தை தரலனா உன்னையும் போட்டுட வேண்டியது தான் என்று சொல்ல சுபாஷ் மேலும் ஷாக் ஆகிறான். ரவுடி உன்னை போட்டுட்டா பணத்தை எப்படி வாங்குறது? நான் போடல எனவும் சொல்ல சுபாஷுக்கு குழப்பம் அதிகமாகிறது.

இதனை தொடர்ந்து மறுநாள் போலீசில் கம்பளைண்ட் கொடுக்கிறான் சுபாஷ். மறுபக்கம் வீட்டு பெண்கள் எல்லாரும் கோவிலுக்கு வர அங்கு ஒரு கும்பல் அர்ச்சனாவை சுட முயற்சி செய்ய மீராவும் சீதாவும் அர்ச்சனாவை காப்பாற்றுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது அறிய சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

மேலும் படிக்க 

Director Ameer: பாஜக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு என்னவாகுமோ? - இயக்குநர் அமீர்

Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது 'லால் சலாம்' ட்ரைலர்... படக்குழுவின் சூப்பர் அப்டேட்!

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola