தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் எழிலை பாட்டிலால் அடித்து விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, இவர்கள் போலீஸ் ஸ்டேஷன் வர போலீஸ் இவர்களை விசாரிக்க எழில் இவங்களை காப்பற்ற தான் வந்ததாக சொல்ல சுடர் உண்மை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள், மேலும் அவளை பற்றி கேட்க பதில் எதுவும் சொல்லாமல் நிற்க அவளது பேக்கை திறந்து பார்க்க உள்ளே இருக்கும் செர்டிபிகேட்டுகளை பார்த்து தமிழ் செல்வியா என்று கேட்க ஆமாம் என சொல்லி விடுகிறாள்.


பிறகு எழில் வெளியே வர சுடர் மன்னிப்பு கேட்க அவன் எதுவும் பேசாமல் ஆட்டோவில் ஹாஸ்பிடல் கிளம்ப சுடரும் அவனுடன் ஆட்டோவில் ஏறி மன்னிப்பு கேட்டு கொண்டே வருகிறாள். ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்கியதும் நர்ஸ்களிடம் சீக்கிரம் ட்ரீட்மெண்ட் கொடுங்க என சத்தம் போடுகிறாள்.


அதோடு நிறுத்தாமல் நீங்க எதுக்கு சார் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தீங்க, வேற ஹாஸ்ப்பிட்டல் போயிருக்கலாம் என சொல்ல எழில் தான் இந்த ஹாஸ்பிடல் எம்.டி என சொல்ல சுடர் மயங்கி விழுந்து ட்ராமா போடுகிறாள், நைட் எல்லாம் அங்கேயே இருந்து விடுகிறாள். மறுபக்கம் வீட்டில் கேர் டேக்கர் அஞ்சலி பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருக்கும் போது அடித்து விட நான்கு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து அவளை அடி வெளுக்கின்றனர்.


மறுநாள் சுடர் பஸ் ஸ்டாப்பில் நிற்க எழிலும் அங்கு வர ரவுடிகள் ஒரு பெண்ணின் பேகை திருடி கொண்டு ஓட அவர்களை அடிக்க பாட்டிலை எடுக்க எதிரே எழில் வந்து நிற்க மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.