Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது 'லால் சலாம்' ட்ரைலர்... படக்குழுவின் சூப்பர் அப்டேட்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபலமான முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஏராளமான சர்ச்சைகள் இப்படத்திற்கு எதிராக எழுப்பப்பட்டு வருகிறது.
படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு இன்று மாலை 5 மணிக்கு 'லால் சலாம்' படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இன்று மாலை வெளியாக இருக்கும் ட்ரைலரை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.