ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது சீரியலின் வருகையுடன், பிற சீரியல்களின் நேரமும் அதிரடியாக மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் ‘நினைத்தேன் வந்தாய்’ என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் முதல் சீசன் மற்றும் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.


இவர் ஹீரோவாக நடிக்க, கீர்த்தனா பொட்வால் கணேஷின் முதல் மனைவியாகவும் ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராமின் குழந்தைகளாக கனிஷ்கா, கௌஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடிக்க மேலும் பல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர்.


மனைவியை இழந்த எழில் ( கணேஷ் வெங்கட்ராம் ) தனது 4  குழந்தைகளை வளர்க்கத் தடுமாறுகிறார், இந்த நிலையில் சுடர் ( ஜாஸ்மின் ) என்ற பெண் அவனது வாழ்க்கைக்குள் வர அதன் பிறகு நடக்க போவது என்ன? சுடர் 4 பிள்ளைகளின் மனங்களை கொள்ளை கொண்டு அவர்களுக்கு தாயாக மாறுவாளா? இல்லையா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த புதிய சீரியலால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதுகுறித்த முழு விவரம் இதோ! 


தற்போது வரை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியல் இனி வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 


அதோடு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா


RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் - ஆர்.ஜே.பாலாஜி