அண்ணாமலை குடும்பத்துடன் காரில் பாட்டி வீட்டுக் சென்று கொண்டிருக்கிறார். நாற்று நடுவது குறித்து மீனா கூறியதும் "இவ என்னங்க லண்டனுக்கு போற மாதிரி ஆச்சர்யப்பட்டுகிட்டு இருக்கா" என விஜயா கூறுகிறார். அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்ததும் பாட்டி அவர்களை வரவேற்கிறார். முத்து  ஓடிப்போய் பாட்டியைத் தூக்குகிறார். அதற்கு பாட்டி "இப்போதான் உன் பொண்டாட்டி வந்துட்டா இல்ல? அவள தூக்கு" என சொல்கிறார். 


பாட்டி, ரவியிடம் "திரும்பி போறதுக்குள்ள என் கோபத்தை நீ தான் போக்கனும்" என சொல்கிறார். ஊரில் இருப்பவர்கள் ஓடி வந்து முத்துவிடம் நல்ல செய்தி எதுவும் இல்லையா என கேட்கிறார். அதற்கு முத்து புரியாமல் திருப்பிக் கேள்வி கேட்கிறார். ரோகினி விஜயாவிடம் சென்று "ஆண்டி இங்க மீனா ரொம்ப பாப்புலர் போல" எனக் கேட்கிறார். அதற்கு விஜயா "போன டைம் வந்துட்டு போனா இல்லமா, இதுங்கல்லாம் இவள மாதிரி லோக்கல் ஆளுங்க அதான் பாசம் காட்டுதுங்க" எனக் கூறுகிறார். 


வழக்கம் போல் முத்து மனோஜை கலாய்க்கிறார். "முத்து பேச்சல்லாம் எடுத்துக்காதமா, அவன் இங்க தானே வளர்ந்தான் அவனுக்கு செல்வாக்கு அதிகம்" என விஜயா ரோகினியிடம் கூறுகிறார்.  விஜயா, "ஏய் மீனா இங்க வா எங்க எல்லோருக்கும் காபி போட்டு கொண்டு வா" எனக் கூறுகிறார். "என்ன அண்ணாமலை இவ மீனா கிட்டயே எல்லா வேலையும் சொல்றா, மத்த ரெண்டு பொண்ணுங்க கிட்ட சொல்ல மாட்டாளா?" என பாட்டி கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ”அவங்க பணக்கார பொண்ணுங்க இல்லமா அதான் சொல்ல மாட்டிங்குறா, அங்கேயும் அப்டிதான் பாவம் மீனா தான் எல்லா வேலையும் செய்வா” எனக் கூறுகிறார். 


விஜயா, மீனாவிடம் அனைத்து வேலையும் செய்யச் சொல்லுகிறார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாட்டி, ”ஓவரா ஆடுறாளே” எனக் கூறுகிறார். பின் மீனாவிடம் விஜயா சொன்ன அனைத்து சமையல் வேலைகளையும் விஜாவை செய்ய சொல்கிறார் பாட்டி. ”பொங்கல் முடியுற வரைக்கும் சமையல் எல்லாம் உன் பொறுப்பு” என கூறுகிறார்.


மற்ற இரண்டு மருமகள்களை உதவிக்கு வைத்துக்கொள்ளுமாறு பாட்டி கூறுகிறார். அதற்கு விஜயா, ”அய்யோ அத்த அவங்க மீனா மாதிரி இல்ல பெரிய இடத்து பொண்ணுங்க” எனக் கூறுகிறார். 


ஸ்ருதி ”பாட்டி எனக்கு சமைக்கத் தெரியாது” என சொல்கிறார். அதற்கு பாட்டி ”சாப்பிடத் தெரியுமா?”எனக் கேட்கிறார். ”எங்களுக்கு சமைக்கத் வராது” என ரோகினி சொல்கிறார். ”வராதுனு ஒதுங்கி நின்னா எப்படி? கூடமாட சேர்ந்து சமைக்கத் தெரிஞ்சிக்கணும்” என்கிறார் பாட்டி.


விஜயா சமையல் வேலை செய்து டயர்ட் ஆகி விடுகிறார். காய் வெட்டும்போது ஸ்ருதி தெரியாமல் விரலை வெட்டிக் கொள்கிறார். ஸ்ருதி வலி தாங்க முடியாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார். பாட்டி “அடிபடாமல் வாழ்க்கையில எதையும் கத்துக்க முடியாது” என சொல்கிறார்.  ஒருவழியாக விஜயாவும் ரோகினியும் சேர்ந்து சமைத்து முடித்த பின் அனைவரும் சாப்பிடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.