RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் - ஆர்.ஜே.பாலாஜி

பாலிவுட்டில் மட்டும் நெப்போடிஸம் இல்லை கோலிவுட்டிலும் இருக்கிறது என்று நடிகர் ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார்

Continues below advertisement

கோலிவுட்டில் நெப்போடிஸம் குறித்து நடிகர் ஆர்.ஜே பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஆர்.ஜே பாலாஜி

எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில் நடித்த ஆர்.ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின் இசையமைத்து ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் ஜனவரி 25 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.  சொந்தமாக சலூன் கடை வைத்து ஒரு சிறந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசைப்படும் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது.

தற்போது ஆர்.ஜே. பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். படம் குறித்தும் தனது சினிமா கரியர் குறித்தும் பல்வேறு கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டு வருகிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

இந்தியன் 2 இல் நடிக்க மறுத்தது ஏன் ?

கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் ஆர். ஜே பாலாஜி நடிக்க இருந்த நிலையில் பின் இந்தப் படத்தில் அவர் நடிக்காமல் போகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய ஆர். ஜே பாலாஜி  “ இந்தியன் 2 படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்யும்போது இயக்குநர் ஷங்கர் எனக்கு ஃபோன் செய்தார், மற்ற கதாபாத்திரங்களுக்கு எல்லாம் தான் ஆடிஷன் வைத்து நடிகர்களை தேர்வு செய்திருப்பதாகவும் ஒரு கதாபாத்திரத்தில் மட்டும் முதலில் இருந்து என்னுடைய பெயரை எழுதியிருப்பதாக தெரிவித்தார்.

நானும் அந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நான் எல்.கே ஜி படத்தை இயக்கிவிட்டேன். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது ஷங்கர் என்னை அழைத்தார். அப்போது நான் என்னுடைய கரியரை திட்டமிட்டிருந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என்று அவரிடம் சொன்னேன். அவரும் என்னைப் புரிந்துகொண்டு படம் தாமதமானது தன்னுடைய பொறுப்பு என்று எடுத்துக் கொண்டார். எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்.’ என்று அவர் தெரிவித்தார்.

இவன் சும்மாவே பேசுவான்

திரைத்துறையில் நெப்போடிஸம் குறித்து பேசிய போது ஆர்.ஜே பாலாஜி இப்படி கூறினார் “ நெப்போடிஸம் பாலிவுட்டில் மட்டுமில்லை  எல்லா இடத்திலும் இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் நெப்போடிஸம் இருக்கிறது. இங்கு தமிழ் சினிமாவில் நெப்போடிஸம் இருக்கிறது. நான் எல்.கே.ஜி படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நிறைய பேர் ஃபோன் செய்து “இவன் எல்லாம் சும்மாவே பேசுவான் இவனை எதுக்கு ஹீரோ ஆக்குறீங்க” என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.

அப்படி சொன்னவர்கள் எல்லாம் ஏதோ ஒரு நடிகரோ? அல்லது தயாரிப்பாளரின் குழந்தைகள். இதை எல்லாம் கடந்து  எந்த விதமான பின்னணியும் இல்லாமல் இங்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். விஜய் சேதுபதி எந்த விதமான சினிமா பின்புலத்தையும் சேர்ந்தவர் இல்லை . அவர்களைப் போன்றவர்கள் தான் என்னை மாதிரியான ஆட்கள் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்வதற்கு ஊக்கமளிக்கிறது “ என்று அவர் கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola