தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல் இந்த சேனலில் தொடக்கத்தில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தன. 


டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பு நேரம்


தற்போது டப்பிங் சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பாகாத நிலையில், ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது சேனல் தரப்பு. அதன்படி வரும் திங்கள் (மே.27) முதல் மதியம் 3 மணிக்கு ‘நானே வருவேன்’ என்ற டப்பிங் சீரியலும், இரவு 10.30 மணிக்கு ‘லட்சுமி கல்யாணம்’ என்ற சீரியலும் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நானே வருவேன் சீரியல் இந்தியில் ராதா மோகன் (Pyar Ka Pehla Naam) என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும், இதில் ஷபீர் நாயகனாக நடிக்க நிஹாரிகா ராய் நாயகியாக நடித்துள்ளார். 


 



அதேபோல், இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள லட்சுமி கல்யாணம் சீரியல் ஹிந்தியில் பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும். இதில் ரோஹித் சுசாந்தி நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா கரே நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



வரும் திங்கள் முதல் இந்த இரண்டு சீரியல்களையும் ஒளிபரப்ப உள்ளதாக சேனல் தரப்பு அறிவித்துள்ளது டப்பிங் சீரியல்களுக்கென இருக்கும் தனி ரசிகர் பட்டாளத்தை உற்சாகமடையச் செய்து வரவேற்பைப் பெற்று வருகிறது.


மேலும் படிக்க: PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!


Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!