Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில்  போலீசாக வந்த தீபா ரவுடிகளிடம் இருந்து குழந்தையை காப்பாற்றிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, தீபா குழந்தையை கையில் வாங்கியதும் அவளுக்கு வீட்டில் இருந்து போன் கால் வருகிறது, இந்த போன் காலில் அவளது தங்கச்சி வயசுக்கு வந்து விட்டதாக சொல்கின்றனர். ரொம்ப நாளாக வயசுக்கு வராதவள் இப்போ வந்துட்டா என்று சொன்னதும் தீபா சந்தோசப்படுகிறாள். எல்லாம் இந்த குழந்தை வந்த நேரம் என்று சந்தோசப்படுகிறாள். 


மறுபக்கம் உண்மை அறியும் மாரி தாரா ரூமுக்கு வந்து, “நீங்க தான் என் குழந்தையை கடத்த திட்டம் போட்டு இருக்கீங்க, உண்மையை சொல்லுங்க” என்று சத்தம் போட, தாரா “எனக்கு எதுவும் தெரியாது” என்று சமாளிக்க, மாரி அவள் கழுத்தைப் பிடித்து அலேக்காக தூக்கி, “என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன்” என்று வார்னிங் கொடுக்கிறாள். 


இதையடுத்து தீபாவின் வீட்டில் அவளது தங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்க ரவுடிகள் கதிரேசன், சுந்தரேஷன் ஆகியோர் பர்தா அணிந்து கொண்டு குழந்தையைத் தூக்க வீட்டுக்குள் நுழைகின்றனர். இப்படியான நிலையில் மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!


Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!