'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய (மே 25) எபிசோடில் மனோஜுக்கு திருஷ்டி பட்டு இருக்கும் என அவர்களை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்  வரவேற்கிறாள் விஜயா. அதை பார்த்து அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். "ஒரு நாளுக்கே இப்படியா? செய்யற வேலையை பிடித்து செய்தா என அசதியும் தெரியாது " என மீனா, ரவி, ஸ்ருதி என அனைவரும் சொல்கிறார்கள். ரோகிணிக்கு கோபம் வந்துவிடுகிறது. "அவரும் பிடித்து தான் செய்கிறார். நிறைய பேரிடம் பேசியதால் சோர்வாகிவிட்டார்" என அவனுக்கு சப்போர்ட்டாக பேசிவிட்டு சென்று விடுகிறாள்.


மனோஜ் ரூமிலேயே தூங்கிவிட்டதால் முத்து டென்ஷனாகிறான். அவனை வெளியே வந்த படுக்க சொல்லி ரோகிணியிடம் சண்டை போடுகிறான். மீனா எவ்வளவு தடுத்தும் முத்து கேட்கவில்லை. அண்ணாமலை "நீங்க எங்களோட ரூம்ல போய் படுத்துகோங்க நாங்க வெளியே படுத்துக்குறோம்" என சொல்ல "நாங்களே படுத்துக்குறோம். நீ போய் உள்ள படுத்துக்கோப்பா" என முத்து சொல்லிவிடுகிறேன். ரோகிணி நினைத்ததை செய்துவிட்ட பெருமையில் ரூமில் சென்று படுத்துக்கொள்கிறாள்.


 




முத்துவும், மீனாவும் மாடியில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மீனாவை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறான் முத்து. "நான் பெருசா படிக்கல. டிரைவர் பொண்டாட்டின்னு உன்னை எல்லாரும் சொல்வாங்க. அது உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். உன்னை நான் நல்லபடியா பாத்துக்குவேன்" என மீனாவிடம் முத்து சொல்ல "நான் இப்போவே சந்தோஷமா தான் இருக்கேன்" என மீனா சொல்கிறாள்.

அடுத்த நாள் காலை மீனா அனைவருக்கும் காபி கொடுக்க "ரோகிணிக்கும், மனோஜுக்கும் காபி கொடுத்தாச்சா?" என கேட்கிறாள் விஜயா. "அவங்க இன்னும் எழுந்து வரவில்லை" என மீனா சொல்ல விஜயா போய் ரோகிணி ரூம் கதவை தட்டி எழுப்புகிறாள். "மனோஜ் இன்னும் முழிக்கவில்லை" என ரோகிணி சொன்னதும் விஜயா சென்று மனோஜை எழுப்புகிறாள்.  விஜயா மனோஜ் ரொம்ப நேரமாகியும் தூக்கத்தில் இருந்து முழிக்காமல் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன் என படுத்துக்கொண்டே இருக்கிறான். விஜயா சின்ன குழந்தையை எழுப்புவது போல எழுப்ப அனைவரும் அதை பார்த்து கிண்டல் செய்கிறார்கள். "இப்படி இருந்தா தொழில் எப்படி செய்ய முடியும். உருப்படவே முடியாது" என்கிறார் அண்ணாமலை. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.