தமிழ் சின்னத்திரையில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம் ரங்கநாயகியின் சதியால் யமுனா வாழ்க்கையில் புயல் வீச தொடங்கிய நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement


அதாவது கார்த்திக்கும் பிரியாவுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க ப்ரியா ரங்கநாயகி வீட்டிற்கு வந்து அவளை தனியாக சந்திக்க ரங்கநாயகி இங்க எதுக்கு வந்த என்று பதறுகிறாள். எனக்கு உடனடியா ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்க ரங்கநாயகி கல்யாணம் முடியட்டும் தரேன் என்று சொல்ல பணம் கொடுத்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று செக்மேட் வைக்கிறாள்.


இதனால் ரங்கநாயகி பணத்தை கொடுக்க ஒப்பு கொள்கிறாள், இதையெல்லாம் சக்தியும் சரண்யாவும் பார்த்து விட 1 லட்சத்தை விட அதிகமாக பணம் கொடுத்து கல்யாணத்தில் இருந்து ப்ரியாவை ஓட விட முடிவெடுக்கின்றனர். இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் ப்ரியாவை சந்தித்து பேச அவளும் பணத்தை வாங்க போக அந்த நேரம் பார்த்து கார்த்திக் வந்து விடுகிறான். உடனே ப்ரியா என்னை நீங்க விலை பேச பாக்கறீங்க, நான் கார்த்தியை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்ல கார்த்திக் சக்தியை பார்த்து இப்படியெல்லாம் பண்ண உங்களுக்கு அசிங்கமா இல்லையா என்று திட்டி அனுப்புகிறான்.


பிறகு ரங்கநாயகி பணம் கொடுக்கும் காட்சியை வீடியோவாக ரெகார்ட் செய்து விடுகிறாள் ஷக்தி. கோவிலில் கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருக்க அங்கு வரும் சக்தி ப்ரியா நடிக்க வந்தவள், அதற்கான ஆதாரம் இருப்பதாக சொல்லி அந்த வீடியோ ஆதாரத்தை டிவியில் போட்டு காட்டுவதாக ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் படிக்க 


Ethirneechal: போலீசுடன் வீட்டுக்கு வந்த ஆதிரை.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து காத்திருக்கும் பிரச்சினைகள்..!


Prakash Raj: நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு சிக்கல்! - நடவடிக்கைக்கு தயாரான தமிழக அரசு