Prakash Raj: கொடைக்கானலில் அரசு விதிமுறைகளை மீறி கட்டிடங்களை கட்டிய நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நடிகர்கள் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் அரசு விதிமுறைகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம் கட்டியதாக முகமது ஜூனை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், விதிமுறைகளை பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டிடங்களை எழுப்பி வருவதாகவும், இதனால் கொடைக்கானல் பகுதியில் மண் சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியதுடன், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்து வரும் பாபிசிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதை கேட்ட நீதிபதி கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
முன்னதாக புகார் குறித்து அறிந்த வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மண்டல உதவி அலுவலர் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில் பிரகாஷ்ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா நிலம் இருப்பது உறுதி செய்யபப்ட்டது. மேலும், பிரகாஷ் ராஜ் தனது நிலத்திற்கு அருகே செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமிக்கவில்லை என்றும், அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த தடை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து சென்றனர்.
இந்த சூழலில் நிலம் தொடர்பான வழக்கில் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rajinikanth: ஸ்ரீதேவியை கல்யாணம் பண்ண நினைத்த ரஜினி.. எமனாக வந்த மின்சாரம்.. கடைசியில் நடந்தது என்ன?