தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் ஆதி ஆபிசில் இருந்து கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது ஆதியும் பாரதியும் மௌனத்தால் காதலை பரிமாறி கொள்ள ஆதி தனது மனதுக்குள் இருக்கும் காதலை சொல்லி விட்டு கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறுகிறான். அதன் பிறகு ஆதியும் கேசவ்வும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்க ஆதி பாரதி எதையோ மறைக்கிறா அது என்னனு தான் தெரியல என பீல் பண்ணுகிறான்.


பிறகு கேசவ் இதுவரைக்கும் ஒரு நண்பனாக உன்கிட்ட உண்மையா தான் மச்சான் இருந்து இருக்கேன், இனிமேலும் அப்படி இருக்கணும்னு தான் நினைக்கிறேன் என அம்மா தன்னிடம் நீ காதலிக்கும் பெண் யார் என்று சொல்லி விட்டதாக சொல்லி உண்மையை வாங்கிய விஷயத்தை உடைக்க ஆதி அதிர்ச்சி அடைகிறான். அவங்க இதை உன்கிட்ட சொன்னா செய்து போய்டுவேன்னு மிரட்டினாங்க அதனால் தான் சொல்லல எனவும் சொல்கிறான்.


பிறகு ஆதியும் கேசவ்வும் வீட்டிற்கு வர சந்தோசத்துடன் அவர்களை வரவேற்கும் சாரதா உனக்கு பேர்வெல் பார்ட்டி எல்லாம் நடத்தினாங்களாம், அது எவ்வளவு பெரிய விஷயம் என சொல்லி பேசுகிறாள். மேலும் நீ காதலிக்கிற பொண்ணை உன் கூட சேர்த்து வைக்கணும்னு தான் நினைத்தேன், ஆனால் அந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கல, கவலைப்படாத என்று சொல்லி விட்டு உள்ளே போக ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறான்.


சாரதா என்னப்பா சொல்ற என்று கேட்க எதையுமே முகத்துக்கு நேரா டீல் பண்ணி தானே உங்களுக்கு பழக்கம், அப்படி இருக்கும் போது ஏன் இப்படி பண்ணீங்க என கேட்டு ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க 


Director Ameer: பாஜக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு என்னவாகுமோ? - இயக்குநர் அமீர்


Sridevi Death Case: நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம்.. பிரதமரின் போலி கடிதங்கள்.. யூடியூபரால் பரபரப்பு