Actor Sridevi Death Case: நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக சந்தேகம் கிளப்பி வந்த பெண் யூடியூபர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


ஸ்ரீதேவி மரணம்:


தென்னிந்திய சினிமாக்கள் தொடங்கி பாலிவுட் வரை கோலோச்சி இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர்  ஸ்டார் நடிகையாக திகழ்ந்து கொண்டாடப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான ஸ்ரீதேவி, தன் மகள் ஜான்வி சினிமாவில் அறிமுகம் ஆகும் நேரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென உயிரிழந்தது இந்திய சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


துபாயில் திருமணம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது பாத்டப்பில் மூழ்கி ஸ்ரீதேவி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மொத்த குடும்பத்தினரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஸ்ரீதேவி பாத்டப்பில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக இன்று வரை அவரது ரசிகர்களுக்கு  கேள்விகள் எழுந்து வருகின்றன. அவரது மரணத்தை சுற்றி ஏராளமான கட்டுக்கதைகளும் இணையத்தில் உலா வருகின்றன.


பெண் யூடியூபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்:


குறிப்பாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த் தீப்தி பின்னிதி என்பவர் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ரீதேவி  விவாதங்களில் பங்கேற்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். யூடியூபர் தீப்தி பின்னிதி, ஸ்ரீதேவி மரணத்தில் இருக்கும் மர்மங்களை இரு அரசுகளும் மூடி மறைப்பாக குற்றம் சாட்டி,  இந்த மர்மங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்து இருந்தார்.


இதோடு இல்லாமல், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் கடிதங்கள் என்று கூறி சில கடிதங்கள், உச்சநீதிமன்றத்தின் ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆவணங்கள் என்ற வெளியிட்டிருந்தார் தீப்தி பின்னிதி. நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக சந்தேகம் கிளப்பி வந்த பெண் யூடியூபர்  தீப்தி பின்னிதி மீது புகார் எழுந்தது.


மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாந்தினி ஷா என்பவர் புகார் கொடுத்ததை அடுத்து, கடந்த ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனை அடுத்து, தீப்தி பின்னிதி வீட்டில் சோதனையிட்டு, அவரது செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தது.  


"அனைத்து கடிதங்களும் போலியானாவை”


இந்த நிலையில், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் யூடியூபர் தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் காமத் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் கடிதங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆவணங்கள்  என தீப்தி வெளியிட்டது அனைத்து போலியானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  


குற்றப்பத்திரிகை தொடர்பாக தீப்தி பின்னிதி கூறுகையில், " சிபிஐ தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன்" என்று கூறியுள்ளார்.




 


மேலும் படிக்க


Director Ameer: விஜய்யின் அரசியல் வருகை காலத்தின் கட்டாயம் - இயக்குநர் அமீர் வரவேற்பு!