தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி ஷண்முகத்திற்கு ஆபரேஷன் செய்து உயிரை காப்பாற்ற கண் விழித்த ஷண்முகம் கப்பை வாங்க போக வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


சண்முகத்தை கபடி போட்டி நடந்த இடத்திற்கு அழைத்து செல்ல அவன் ஜெயித்ததற்காக கப்பு வாங்கி கொண்டு பிறகு வீட்டிற்கு வருகிறான். தங்கைகள் ஆரத்தி எடுத்து சண்முகத்தை வீட்டிற்குள் அழைத்து செல்ல அவன் கீழே படுக்க போக பரணி அவனை மேலே பெட்டில் படுக்க சொல்லி படுக்க வைக்கிறாள்.


அதன் பிறகு கோபமாக வெளியே வரும் பரணி ஷண்முகத்தோட இந்த நிலைமைக்கு காரணமான முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சும்மா விட கூடாது, அவங்க பண்ண எல்லாத்தையும் நான் நோட் பண்ணி தான் வச்சிருக்கேன், கமிஷனர் ஆபிஸ் போய் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்ல பாக்கியமும் வைகுண்டமும் அதெல்லாம் வேண்டாம் என்று பதறுகின்றனர். ஷண்முகம் உயிர் பிழைத்து வந்ததே போதும், திரும்பவும் பிரச்சனை வேண்டாம் என்று சொல்லி பாக்கியம் வீட்டிற்கு வருகிறாள்.


இங்கே வீட்டில் பாக்கியம் உடம்பு முடியாமல் படுத்திருக்க பாண்டியம்மா சாப்பிட வந்து உட்காருகிறாள். பாக்கியம் வெளியே வராமல் படுத்திருக்க ரூமுக்குள் வந்த பாண்டியம்மா சமைக்காமல் என்னடி வந்து படுத்துட்டு இருக்க என்று முடியை பிடித்து இழுத்து சண்டையிட இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக சௌந்தரபாண்டி இவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


Siragadikka Aasai: மலேசியா மாமா பஸ்ஸில் வராறா? வாய் விட்டு மாட்டிக்கொள்ளும் ரோகினி! - இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்


Sandhya Ragam: உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த மாயா.. முடிவை தீர்மானிக்கும் மக்கள் - ஜீ தமிழில் அடுத்த அதிரடி அறிவிப்பு.!!


Ethirneechal: தர்ஷினியை காணவில்லை... பதட்டத்தில் ஈஸ்வரி... குணசேகரன் செய்த அடாவடித்தனம்... எதிர்நீச்சலில் இன்று