Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


மீனா ஸ்ருதியின் அலுவலகத்திற்கு சென்று ஸ்ருதியை சந்திக்கிறார். ”ஏன் ஸ்ருதி வீட்டுக்கு வர மாட்டிங்கிறீங்க?” என மீனா கேட்கிறார். “நீங்க செயின் எடுத்தத பார்த்துட்டு எங்க அப்பா தப்பா புரிஞ்சிக்கிட்டாறு அவ்ளோ தானே அதுக்காக உங்க ஹஸ்பண்ட் அடிப்பாரா?” என ஸ்ருதி கேட்கிறார். ”உங்க அப்பா ரொம்ப அவமானப்படுத்துற மாதிரி பேசிக்கிட்டே இருந்தாரு. என் குடும்பத்தையே திருட்டு குடும்பம்னு சொன்னரு. அதுக்கப்புறம் தான் அவரு கோவப்பட்டு உங்க அப்பாவ அடிச்சாரு” என மீனா சொல்கிறார். 


”என் தம்பி ஒரு தடவை தெரியாம பைக் திருடிட்டான்” என்று சொல்லி மீனா அழுகிறார். ”எதுக்கு உங்கள பத்தி இவ்ளோ எக்ஸ்ப்ளைனேஷன் கொடுக்குறிங்க” என்று கேட்கிறார் ஸ்ருதி. ”வீட்டுக்கு வாங்க ஸ்ருதி” என மீனா கெஞ்சி கேட்கிறார். ”நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இதுக்கப்புறம் உங்க விருப்பம் தான்” என மீனா சொல்கிறார்.


முத்து ரெஸ்டாரண்டுக்கு சென்று முத்துவை சந்திக்கிறார். ”சும்மா ஒருநாள் இருந்தோமா வந்தோமானு இல்லாம நீ என்னடா அங்கேயே இருக்க” என முத்து ரவியிடம் கேட்கிறார். அதற்கிடையில் ரவியின் ஃப்ரெண்ட் வந்து, ”அண்ணே இவன் இங்க தான்ணே ஸ்டோர் ரூம்ல தங்கி இருக்கான். அறிவுரை சொல்லி கூட்டிக்கிட்டு போங்கண்ணே” என சொல்கிறார். ”உன் மேல எவ்ளோ பாசமா இருக்காங்க வீட்டுக்கு வாயேண்டா நீ” என சொல்கிறார் முத்து.


”ஸ்ருதி இல்லாம நான் வீட்டுக்கு வற்றதா இல்லை” என ரவி சொல்கிறார். மீனா தன் அம்மா தங்கச்சியுடன் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டு இருக்கிறார். அப்போது ஸ்ருதியின் பங்ஷனில் நடந்த சண்டை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது மீனாவின் தம்பி முத்துவை ரவுடி என சொல்கிறார். அதற்கு மீனா சத்யாவை பார்த்து ”என்னடா வாய் ரொம்ப நீளுது” என கேட்கிறார். ஸ்ருதி ரவியின் ரெஸ்டாரண்டுக்கு போன் பண்ணி உணவு ஆர்டர் செய்கிறார். அப்போது மறுமுனையில் ஸ்ருதியுடன் பேசும் ரவியின் நண்பர் ”ரவி கிட்ட சொல்லி இருந்தா அவனே எடுத்துட்டு வந்து இருப்பானே” என கேட்கிறார். பின் ரவியின் ஃப்ரண்ட் அந்த ஆர்டரை ரவியிடம் கொடுத்து  தயார் செய்ய சொல்கிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது. 


மேலும் படிக்க 


Indian 2 Release Date: 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்தியன் தாத்தா! கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் எப்போது?


Kaatru Veliyidai: உதவி இயக்குநர் - ஹீரோ.. கார்த்தியுடன் இணைந்த மணிரத்னம் - ”காற்று வெளியிடை” வெளியான நாள் இன்று!