சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
ஸ்ருதியின் அம்மா விஜயாவை பார்க்க வீட்டுக்கு வருகிறார். பங்ஷனுக்கு ஹால் பார்த்து விட்டதாக ஸ்ருதியின் அம்மா சொல்கிறார். நிகழ்ச்சியில் எந்த பிரச்னையும் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் விஜயாவிடம் சொல்கிறார். விஜயா அண்ணாமலையிடம் ஸ்ருதியின் அம்மா சொன்னதை சொல்கிறார். முத்து வந்தா பிரச்சனை ஆயிடும்னு ஸ்ருதியின் அம்மா சொன்னதாக விஜயா சொல்கிறார்.
"அவங்க உன் புள்ளைய வர வேண்டானு சொன்னா நீயும் பல்ல காட்டிக்கிட்டு வந்துடுவியா?" எனக் கேட்கிறார் அண்ணாமலை. சரி முத்து வர மாட்டான் என அண்ணாமலை சொல்கிறார். அப்போது முத்து வந்து விடுகிறார். ”அவன் வர்லனா நானும் வர்ல” என அண்ணாமலை சொல்கிறார். ”மாமா வர்லனா நானும் வர்ல” என மீனா சொல்கிறார். ”நம்ம வீட்ல என்ன பங்ஷன் நடந்தாலும் முத்துவால எதாவது ஒரு பிரச்னை வந்துகிட்டே இருக்கு” என ரோகிணி சொல்கிறார்.
”எங்கயும் அவன் நியாயம் இல்லாம நடந்துக்கிட்டது இல்ல. ஒரு குடும்பத்துல விசேஷம் நடக்கும் போது ஒரு ஆள மட்டும் வர வேணானு ஒதுக்கி வைக்கிறது தப்பு இல்லையாமா?” என அண்ணாமலை கேட்கிறார். ”நம்ம ஃபேமிலில எல்லோரும் ஒன்னா இருந்தாதான்மா எனக்கு சந்தோஷம்” என ரவி சொல்கிறார். ”அங்கிள் மம்மி சொல்றத எல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க நீங்க வாங்க” என ஸ்ருதி சொல்கிறார்.
பின் ரவி வர சொல்லி வற்புறுத்துகிறார். முத்துவும் அண்ணாமலையும் நிகழ்ச்சிக்கு வர ஒத்துக்கொள்கின்றனர். ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பங்ஷனில் முத்துவை வைத்து பிரச்னை ஏற்படுத்த திட்டம் தீட்டுகின்றனர். முத்துவால் பிரச்சனை ஏற்படும் என தான் முன்கூட்டியே சொல்லி விட்டதால், அவனை வைத்து பிரச்னை செய்து விட்டு, “அவன் இருக்குற வீட்ல என் பொண்ணு இருக்க மாட்டா” என சொல்லி ஸ்ருதியை அங்கிருந்து கூட்டி வரப் போவதாக ஸ்ருதியின் அம்மா தன் கணவரிடம் சொல்கிறார். இதைக் கேட்டு ஸ்ருதியின் அம்மா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க
Gemini Ganesan: தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன்- ஜெமினி கணேசனின் 19வது நினைவு நாள் இன்று!
Lokesh Kanagaraj: அங்க என் தலையை வெட்டிட்டு இங்க ரொமான்ஸா? - லோகேஷை கலாய்த்த காயத்ரி!