Lokesh Kanagaraj: அங்க என் தலையை வெட்டிட்டு இங்க ரொமான்ஸா? - லோகேஷை கலாய்த்த காயத்ரி!

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். அப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ஜோடியாக நடித்த அவரை தலையை வெட்டி கொல்வது போன்ற காட்சி இருக்கும்.

Continues below advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ஆல்பம் பாடலின் ப்ரோமோ வெளியான நிலையில் இதனை நடிகை காயத்ரி பங்கமாக கலாய்த்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ளவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பணிகளுக்காக அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி உள்ளார். 

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷை நடிகராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்திருந்த லோகேஷ் நடிகராகிறார் என்பது சர்ப்ரைஸ் ஆகவும் இருந்தது. 

இப்படியான நிலையில் கமல்ஹாசன் பாடல் வரிகள் எழுத, ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள ஆல்பம் பாடலில் தான் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இந்த பாடலின் போஸ்டர் அறிமுக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான நிலையில் நேற்று இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.இனிமேல் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடம் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் லோகேஷ் செய்துள்ள ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து அனைவருமே ஆச்சரியப்பட்டுள்ளனர். 

மேலும் லோகேஷை சரமாரியாக மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். தன்னுடைய படங்களில் காதல் காட்சிகள் வைக்காத அவர் ஆல்பம் பாடலில் மட்டும் இப்படி கொஞ்சுவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். அப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ஜோடியாக நடித்த அவரை தலையை வெட்டி கொல்வது போன்ற காட்சி இருக்கும். 

இதனை குறிப்பிட்டு பேசியுள்ள காயத்ரி, “உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு.. என்னம்மா இதெல்லாம்?” என நகைச்சுவையாக குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ளார். 


மேலும் படிக்க: Lokesh Kanagaraj: ஸ்ருதி ஹாசனுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்: வெளியான டீசர் வீடியோ!

Continues below advertisement
Sponsored Links by Taboola