சத்யா தன் ஸ்டாண்டுக்கு வந்ததாகவும், என் அக்காவை வீட்டுக்கு அனுப்பி அட்வைஸ் பண்ணாதிங்க என்று சொன்னதாகவும் முத்து மீனாவிடம் சொல்கிறார். ”அவன் ஏன் உங்கள பார்க்க வந்தான்?’ என மீனா கேட்கிறார். ”அதை நீ அவனை போய் கேளு” என்கிறார் முத்து. மேலும் மீனாவிடம் சத்தமாக பேசுகிறார். ”இனிமே நீ உன் தம்பி இருக்க வீட்டுக்கு போக கூடாது” என முத்து சொல்கிறார். மீனா திரும்ப திரும்ப காரணத்தை கேட்கிறார். ஆனால் முத்து சொல்லவில்லை. 


மீனா சத்யாவுக்கு கால் பண்ணி ”மாமாவை பார்க்க போனியா?” என கேட்கிறார். அவரு தான் என்னை திட்டினாரு என சத்யா சொல்கிறார். தன்னை வீட்டிற்கு போக கூடாது என சொன்னது குறித்து சத்யாவிடம் சொல்கிறார். ”ஆலப்பி செல்வது குறித்து என்ன முடிவு எடுத்து இருக்க” என ஸ்ருதி ரவியிடம் கேட்கிறார். ”என்னால எங்கயும் வர முடியாது” என சொல்கிறார் ரவி. ஸ்ருதி தான் தனியே செல்வதாக சொல்கிறார். இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. 


ஸ்ருதியின் அம்மா ஸ்ருதிக்கு கால் பண்றாங்க. அப்போது ரவி பேசியதை ஸ்ருதி தன் அம்மாவிடம் சொல்கிறார். இதனால் ரவி கோபமடைகிறார். பின் இருவரும் சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். மனோஜ் விஜயாவிடம் காசு கேட்கிறார். தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டதாக சொல்கிறார் மனோஜ். எப்படா நீ வேலையை விட்ட என கேட்டு விஜயா மனோஜை அடிக்கிறார்.  ரோகினிக்கு தெரியுமா என்று விஜயா கேட்கிறார். ரோகினி பிடித்த வேலையை தேடிக்கொள்ள சொன்னதாக சொல்கிறார் மனோஜ். இந்த மீனா வேற கடையில போய் உட்கார்ந்துக்குறா நான் தான் சமைக்கணும் என சொல்லிவிட்டு விஜயா சென்று விடுகிறார். 


மனோஜ் அண்ணாமலையின் சட்டையில் இருந்து பணத்தை திருடி விடுகிறார். அண்ணாமலை விஜயாவிடம் சென்று பாக்கெட்டில் இருந்த 300 ரூபாய் பணத்தை காணவில்லை என செல்கிறார். மனோஜ் தான் பணத்தை எடுத்திருப்பார் என்பதை விஜயா புரிந்து கொண்டு சமாளிக்குறார். மனோஜிடம் காசு இருக்கா என அண்ணாமலை கேட்கிறார். இல்லப்பா அக்கவுண்ட்ல தான் இருக்கு என சொல்லி விட்டு மனோஜ் வேலைக்கு செல்கிறார். வாங்க தோசை சுடுறேன் என விஜயா அண்ணாமலையை கூப்பிடுகிறார். அண்ணாமலை பணம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 


மேலும் படிக்க 


Viduthalai 2: “சம்பவம் காத்திருக்கு..ரெடியா இருங்க” ; விடுதலை-2 பற்றி அப்டேட் கொடுத்த விஜய்சேதுபதி


Manjummel Boys: குணா குகையில் வெற்றிக்கொடி நாட்டிய மஞ்சுமெல் பாய்ஸ்.. நேரில் அழைத்து பாராட்டிய கமல்!