சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
மீனாவின் அம்மா மீனாவுக்கு போன் செய்து சத்யா சிட்டி கிட்ட வேலைக்குப் போறேனு சொல்வதாக கூறுகிறார். இதைக்கேட்டு மீனா கோபமாகிறார். விஜயா, அண்ணாமலையிடம், ”இந்த வீட்டுக்குள்ள ஏதோ நடக்குதுங்க. அவன், அவன் மாடியில இருந்து இறங்கி வராணுங்க கேட்டா எதுவுமே சொல்ல மாட்றாங்க” என்கிறார். அது அவங்க பர்ஸ்னல் நீ ஏன் அதன்லாம் கேட்டுகிட்டு இருக்கே.
விஜயா ரவியை கூப்பிட்டு ”உனக்கும் ஸ்ருதிக்கும் எதாவது பிரச்சனையா?” என கேட்கிறார். அதற்கு ரவி இல்லை என சொல்கிறார். இதனையடுத்து ஸ்ருதியிடம் ”என்ன பிரச்சனை ஏன் அவன் மாடிக்கு போனான்” என விஜயா கேட்கிறார். அதற்கு ஸ்ருதி ”அதை நீங்க அவன் கிட்ட தான் கேட்கணும் ஆண்டி” என சொல்லி விட்டு செல்கிறார்.
”இங்க ஏதோ நடக்குது என்னனு தான் தெரியல” என விஜயா அண்ணாமலையிடம் புலம்புகிறார். ”அடுத்தவங்க பிரச்சனைக்கு போனா நமக்கு தான் நிம்மதி இல்லாம போகும்” என்கிறார் அண்ணாமலை. ”அவங்களுக்குள்ள சண்டை இருந்தா அவங்களே சரி பண்ணிக்குவாங்க. நாம போய் அதை பெருசா ஆக்கி விட்டுட கூடாது” என்றும் கூறுகிறார். ”இப்படி ஆளாலுக்கு சத்தம் போட்டா அப்றம் எப்டிங்க இந்த வீட்ல குழந்தை சத்தம் கேட்கும்” என்கிறார் விஜயா. ”அதெல்லாம் கேட்கும் போது கேட்கும். நீ சத்தம் போடாம இரு அததான் கேட்க முடியல” என்கிறார் அண்ணாமலை.
சத்யா வேலைக்கு போவதாக கூறி கிளம்புகிறார். மீனா, அவரின் அம்மா, சீதா உள்ளிட்டோர் சத்யாவை வேலைக்கு போக வேண்டாம் என சொல்கின்றனர். ”அவன் கிட்ட நீ வேலைக்கு போனதுக்கு அப்றம் தான் மாப்பிளை கூட பிரச்சனையே வந்தது” என்கிறார் மீனாவின் அம்மா. அப்போது ஏற்படும் வாக்குவாதத்தின் போது தானும் முத்துவும் பேசவில்லை என்பதை மீனா வாய்த்தவறி சொல்லி விடுகிறார். இதைக்கேட்டு மீனாவின் அம்மா வறுத்தப்படுகிறார்.
ரோகினி மனோஜ் ஹோட்டலில் வேலை பார்த்தது குறித்து வித்யாவிடம் சொல்கிறார். பி.ஏ ரோகினி வேலை பார்க்கும் பார்லருக்கு வந்து 50 ஆயிரம் கேட்டு மிரட்டுகிறார். பேசிக்கொண்டு இருக்கும் போதே பார்லரின் ஓனர் வந்து விடுகிறார். ரோகினியை பயங்கரமாக திட்டுகிறார்.
இதனையடுத்து சிட்டியும், சத்யாவும் முத்துவின் கார் ஷெட்டுக்கு வருகின்றனர். சத்யா விஜயாவிடம் இருந்து வழிப்பறி செய்த காசை முத்துவிடம் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க
Double Tuckerr: வளர்ந்து வரும் ஹீரோக்கள் என்னை மனுசனா கூட மதிக்கல; கண்கலங்கிய அறிமுக இயக்குநர்