சின்னத்திரை நடிகர்களுக்கு இருக்கும் பேன் பாலோவர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வீட்டு உறுப்பினர்களில் ஒருவராக சின்னத்திரை நட்சத்திரங்கள் மாறி வருகிறார்கள். அப்படி ஏராளமான ரசிகர்ளை கொண்டவர் நடிகை நிஹாரிகா. அவரின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் ஒன்றை ரசிகர்களுடன் மிகவும் வித்தியாசமான முறையில் பகிர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று  ராஜா ராணி சீரியல் 2. கூட்டு குடும்பத்தின் பின்னணியில் ஒளிபரப்பான இந்த தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதில் லீட் ரோலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானஸாவின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நிஹாரிகா. அதன் மூலம் மிகவும் பிரபலமான நிஹாரிகா ஏராளமான தொடர்களில் கூட நடித்து வருகிறார். மேலும் மிகவும் அருமையான டான்ஸரும் கூட. 


 




விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வேலைக்காரன்', கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே' உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியான 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் சிறப்பாக தனது திறமையை நிரூபித்து செகண்ட் ரன்னர் அப்பாக வெற்றிபெற்றார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'வித்யா நம்பர் 1' என்ற சீரியலில் நடித்து வருகிறார். 


நடிகை நிஹாரிகா, இயக்குநர் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நிஹாரிகா அவ்வப்போது புகைப்படங்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளுவார். அந்த வகையில் தற்போது நடிகை நிஹாரிகா தான் கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். அதிலும் அதை மிகவும் வித்தியாசமான முறையில் கணவருடன் நிஹாரிகா இருக்கும் புகைப்படத்தில் கருவில் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட் இமேஜை எடிட் செய்து போஸ்ட் செய்துள்ளார். மிகவும் புதுமையான முறையில் இந்த நற்செய்தியை பகிர்ந்ததற்கு பாராட்டுகளையும் நிஹாரிகா - ரஞ்சித் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் ரசிகர்கள் சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள். 



சின்னத்திரை நடிகர்கள் மட்டுமன்றி யூடியூபர்ஸ் மூலம் மிகவும் பிரபலமாக இருக்கும் பலரும் அவர்கள் கோபமாக இருக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு வீடியோ மூலம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காகி வருகிறது.