நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரோமோ இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு என்றுமே மவுசு குறையாமல் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை மீண்டும் ஒளிபரப்பினாலும் டிவி முன் உட்கார்ந்து பார்ப்பவர்கள் ஏராளம். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு சேனல்களும் விதவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. காமெடி மற்றும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொடர்ந்து, பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெறுவது விவாத நிகழ்ச்சிகள் தான்.
அந்த வகையில் டிஆர்பி என்றும் நம்பர் 1 நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் பல ஆண்டுகளாகவே தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் விதவிதமான தலைப்பில் சுவாரஸ்யமான விவாதம் நடக்கும். இதன் தாக்கம் சமூக வலைத்தளங்களிலும் எதிரொலிக்கும். இப்படியான நிலையில், இந்த வாரம் அதிக அக்கறை காட்டும் ஆண் நண்பர்கள் vs அதிக அக்கறை எரிச்சலாக உள்ளது என சொல்லும் பெண்கள் என்னும் தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியான ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் இந்த பக்கம், அக்கறை காட்டும் ஆண் நண்பர்கள் பகுதியில், “இரவு பயணம் பண்ண விடமாட்டேன், சாலையை கடக்கும்போது கையை பிடிப்பது, பொது போக்குவரத்தில் தனியாக பயணம் செய்ய அனுமதிக்கமாட்டேன், நம்ம கூட இருக்குற பெண் தோழிகளை அக்கா, தங்கையாக தான் பார்ப்போம்’ என தெரிவிக்கிறார்கள்.
அதேசமயம் பெண்கள் தரப்பில் பேசியவர்கள், ‘பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் எங்களை அடக்குறாங்க, கட்டுப்பாடுகள் விதிக்காங்க, என்னோட இரண்டாம் கட்ட பெற்றோர்கள் மாதிரி நடக்குறாங்க, பொண்ணுங்கன்னு ஒரு வட்டத்துல சுருக்குறாங்க’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். இதில் ஒரு பெண், ‘அப்பா அம்மாவுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன் வந்தது?’ என கேட்கும் ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க: மகன் அதர்வாவின் முதல் படம்.. ரிலீசுக்கு முன்பே உயிரிழந்த முரளி.. 13 ஆண்டுகளை கடந்த ‘பாணா காத்தாடி’
குழந்தை பிறந்ததாக அறிவித்த இலியானா... தந்தை யார் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி..!