பிரபல பாலிவுட் நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தற்போது குழந்தை பிறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இலியானா
தெலுங்கு சினிமா மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய இலியானா, தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். ஆனால் தமிழை விட தெலுங்கு சினிமா அவரை கொண்டாடியது. மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தின் மூலம் இலியானா கம்பேக் கொடுத்தார். இம்முறை தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.
அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு பாலிவுட் சென்ற இலியானாவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அங்கு பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான தி பிக் புல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து Unfair & Lovely மற்றும் லவ்வர்ஸ் ஆகிய படங்கள் இலியானா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது.
மகிழ்ச்சி செய்தி சொன்ன இலியானா
பாலிவுட் உலகில் பிசியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் இலியானா சில மாதங்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் யார் உங்கள் காதலர் என கேள்வியெழுப்ப தொடங்கினர். அதேசமயம் லண்டன் நகரைச் சேர்ந்த ஒரு மாடல் நடிகருடன் இலியானா உறவில் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து காதலரின் முகம் சரியாக தெரியாத வகையில் போட்டோ வெளியிட்டு குழப்பத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் நேற்று இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துவிட்டதாக தெரிவித்து மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருந்தார். குழந்தைக்கு அவர் கோ ஃபீனிக்ஸ் டோலன் (Koa Phoenix Dolan) என பெயரிட்டுள்ளதாகவும், குழந்தையை ழந்தையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் குழந்தையின் தந்தை யார் என்பதை இன்றளவும் என்பதை இன்றளவும் சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார். இலியானா தனது கர்ப்பம் குறித்து பதிவிட்ட நாளில் இருந்தே தந்தை யார் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். சில வாரங்களுக்கு முன் ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படத்தை இலியானா பகிர்ந்தார். டேட் நைட் என்ற பெயரில் பகிரப்பட்ட புகைப்படத்தில் இடம் பெற்றவர் யார் என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு இலியானாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.