சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஆதிரை அழுதுகொண்டே வீட்டுக்கு வருகிறாள். அவளுக்காக வாசலிலேயே காத்துகொண்டு இருக்கிறான் கரிகாலன். ஆதிரை வந்ததும் "என்ன ஆச்சு ஆதிரை ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன முடிவு எடுத்து இருக்க?" என அவ பின்னாலேயே போகிறான் கரிகாலன். "எனக்கு உன்ன பிடிக்கல. என்னை விட்டுடு" என்கிறாள் ஆதிரை. அதை கேட்ட ஜான்சி "சரி  உன்னை விடணுமா. இனிமேல் உன்னோட குடும்பம் உங்க முன்னாடியே அழியப்போகிறதா நீங்க பார்க்க போறீங்க " என விசாலாட்சி அம்மாவிடம் சொல்கிறாள்.


 



கரிகாலன் ஜான்சியை திட்டி போய் உட்கார சொல்கிறான். ஆதிரையிடம் கெஞ்சுகிறான். " உனக்கு என்னையும் என்னோட வீட்டையும்  பிடிக்காதுன்னு தெரியும். ஆனா போகப்போக இதெல்லாம் பழகிடும். நீ ஒரு வாரம் டைம் கேட்ட அதே போல நானும் உன்கிட்ட ஒரு வாரம் டைம் கேக்குறேன். என்னோட என் வீட்டுக்கு வா. நான் உன்ன மாத்திடுவேன். அப்படியும் உனக்கு என்னை பிடிக்கலைன்னா நானே உன்ன இங்க கொண்டு வந்து விட்டுறேன். அதுக்கு பிறகு உன் பக்கமே வரமாட்டேன்" என்கிறான். 



"இந்த வீட்டில இருக்க எல்லாரும் என்னை பைத்தியக்கார பயன்னு நினைக்குறாங்க. அது எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா. எனக்கும் ஒரு மனசு இருக்கு. அதுல ஆசையும் இருக்கு. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் ஆதிரை. இதுக்கு மேல ஒருத்தன் எவ்வளவு கீழ இறங்கி வர முடியும். வலுக்கட்டாயமாக தாலி கட்டியது என்னோட தப்பு தான். அதுக்காக என்னை மன்னிச்சுடு. உனக்கு என் மேல கோபமா சொல்லு ஆதிரை" என அழுகிறான் கரிகாலன். "உன் மேல கோபம் எல்லாம் கிடையாது. என்ன தயவு செய்து புரிஞ்சுக்கோ. என்னோட மனசுல அருண் தான் இருக்கான்" என்கிறாள் ஆதிரை. 


 



விசாலாட்சி அம்மா ஆதிரையை அடிக்க வருகிறார். நீ எங்க போய்ட்டு வர என எனக்கு தெரியும். அவன் தான் உன்ன காரி துப்பி அனுப்பிட்டானே, ஆனா இவன் உன்ன இப்படி கெஞ்சிகிட்டு இருக்கான். இனிமே இவன் தான் உன்னுடைய புருஷன். நீ அவனோட தான் சேர்ந்து வாழவேண்டும். இல்லைனா நானே உன்னை கொலை பண்ணி புதைச்சுடுவேன்" என்கிறார். ஜான்சியிடம் "நான் அவர்களை அனுப்பி வைக்கிறேன் நீ கிளம்பு மா" என சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார். 


ஆதிரையை ரேணுகாவும், ஈஸ்வரியும் சமாதானம் செய்கிறார்கள். ஆதிரை இனி நீ என் வாழ்க்கையில் இல்லை என அருண் சொன்னதை சொல்லி அழுகிறாள். "பார்த்துக்கலாம், நீ தைரியமாக இரு" என ஆதிரையை சமாதானம் செய்கிறார்கள். 


 



அடுத்த நாள் ஈஸ்வரி மற்றும் ஆதிரையிடம் ஐஸ்வர்யா "ரேணுகா ஸ்கூலில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவை காண்பிக்கிறாள். ரேணுகாவின் நடனத்தை பார்த்த ஈஸ்வரியும், ஆதிரையும் அவளை பாராட்டுகிறார்கள். இதை நீ எதற்காகவும் விட்டுவிட கூடாது என ரேணுகாவிடம் சொல்கிறாள் ஈஸ்வரி. 


கௌதம் ஈஸ்வரிக்கு போன் செய்து தோழரை சந்திப்பதற்காக வந்ததாகவும் அப்போது உங்களை சந்திப்பது குறித்து கேட்ட போது அவர் உங்களை சந்திக்க விருப்பமில்லை என சொல்லிவிட்டார். இருப்பினும் உங்களுடன் போன் மூலம் பேசுவதாக கூறுகிறார் என சொல்லி அவரும் போனை கொடுக்கிறான் கௌதம். "நான் குணசேகரன் மனைவி ஈஸ்வரி பேசுறேன். நீங்க செய்யுறது எந்த விதத்துல நியாயம். சமூக சேவை பண்றேன் என சொல்லி அடுத்தவங்க சொத்தை பிடிங்கி வைச்சுக்கிட்டு அடிச்சு தெருத்தி விடுறீங்க. நீங்க  செய்யுறது கொஞ்சமாவது நியாயமா உங்களுக்கு படுதா" என ஜீவானந்தத்திடம் கேட்கிறாள் ஈஸ்வரி.


அதற்கு அவர் காலம் தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். நீங்க அரைகுறையா தெரிஞ்சுக்கிட்ட விஷயம் எனக்கு முழுசா தெரியும். இதற்கு மேல நான் உங்ககிட்ட பேச விருப்பப்படவில்லை. இப்போ கூட நான் உன்கிட்ட பேசினது நீங்க குணசேகரன் மனைவி என்பதால் அல்ல. ஈஸ்வரி என்ற பெயர் எனக்கு ரொம்பவும் பரிச்சயமான பெயராக இருந்தது அதனால் தான். இனிமேல் என்னுடன் பேச முயற்சி செய்ய வேண்டாம் " என சொல்லிவிட்டு போனை கட் செய்து விடுகிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.