Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீராவும் மாறனும் வீட்டுக்குத் தெரியாமல் கோயிலுக்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, கண்மணி அம்மாவுக்கு ஃபோன் போட்டு பேச, வீரா கடைக்குச் சென்று விட்டதாக சொன்னதை நினைத்து குழப்பத்தில் இருக்க, வீராவுக்கு போன் போட்டு எங்க இருக்க என்று விசாரிக்க, அவள் வெளியே இருப்பதாக சமாளிக்க, கோயில் மணி சத்தம் கேட்டதும் கண்மணி போனை கட் செய்து விட்டு கோயிலுக்கு கிளம்பி வருகிறாள்.
கண்மணி கோயில் படிக்கட்டில் ஏறி வர, எதிரே மாறனும் வீராவும் வர, கண்மணி பார்க்கும்போது வீராவை யாரோ ஒருவர் மறைத்து விட முகம் தெரியாமல் போகிறது. பிறகு ஒரு கட்டத்தில் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது குறுக்கே ஒரு வண்டி வந்துவிட, அப்போதும் பார்க்க முடியாமல் மிஸ்ஸாகி விடுகிறது.
பிறகு ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு கிளம்பி விட, கண்மணியும் ஆட்டோவில் பின்தொடர்ந்து வருகிறாள். ஓரிடத்தில் வழியை மறைத்து ஹோலி கொண்டாட, இருவரும் இறங்கி நடந்து செல்ல முடிவெடுக்கின்றனர். வீரா “என் மேல பவுடர்படாமல் கூட்டிட்டுப் போ” என்று சொல்ல, மாறனும் அப்படியே கூட்டி சென்று ஓரிடத்தில் நின்று பேசி கொண்டிருக்கும்போது ஒரு சின்ன பையன் ஓடி வந்து வீரா மீது கலர் பவுடரை தூவி விடுகிறான். அப்போது கண்மணி வீராவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
மாறன் “நீ என்கூட இருந்தா சந்தோசமா இருக்கேன், குடிக்காமல் இருக்கேன். நீ வாழ்க்கை முழுசும் என்கூட இருக்கனும்னு ஆசைப்படுறேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்க, வீரா ஷாக்காகி நிற்க கண்மணியும் அதிர்ந்து போகிறாள்.
பிறகு கோயிலுக்கு வந்த கண்மணி, “என் அண்ணனையும் காதலனையும் பழி வாங்க தான் பிடிக்காத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கேன், அப்படி இருக்கும்போது நீ இப்படி பண்ணலாமா?” என்று கலங்கி கடவுளிடம் வேண்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Samantha: மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, ஜெயிலில் தள்ள சொன்ன மருத்துவர்.. சமந்தா நீண்ட விளக்கப் பதிவு!