சினிமா எந்த அளவுக்கு மக்களை ஈர்த்துள்ளதோ அதை விட பல மடங்கு தினசரியும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது சின்னத்திரை சீரியல்கள். அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் கடும் போட்டி நிலவுகின்றன. அவ்வப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த போட்டியில் இணைந்து கொள்ளும்.
ரசிகர்களின் கவனத்தை சீரியல்கள் எந்த அளவுக்கு ஈர்த்துள்ளது என்பதை டிஆர்பி ரேட்டிங் தான் நிர்ணயிக்கும். ஒவ்வொரு வாரமும் இந்த டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகும். அதில் புள்ளிகளின் அடிப்படியில் சீரியல்கள் வரிசைப்படுத்தப்படும். அந்த வகையில் 26வது வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி முதல் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் பட்டியலை இப்போது காணலாம்.
10வது இடத்தை 5.59 புள்ளிகளுடன் விஜய் டிவியின் 'ஆஹா கல்யாணம்' மற்றும் 9வது இடத்தை 6.55 புள்ளிகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' தொடர் பிடித்துள்ளது. 8வது இடத்தை சன் டிவியின் 'சுந்தரி' சீரியலும் 7வது இடத்தை விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' தொடரும் கைப்பற்றியுள்ளது.
6.93 புள்ளிகளை பெற்று சன் டிவியில் 'மல்லி' தொடர் 6வது இடத்தையும் 7.94 புள்ளிகளுடன் 5வது இடத்தை விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் தக்கவைத்துள்ளது.
கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த சன் டிவியின் 'வானத்தை போல' சீரியல் இந்த வாரம் 8.00 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலை பின்னுக்கு தள்ளி 4வது இடத்தில் இருந்து 8.12 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது புதிய சீரியலானா 'மருமகள்'.
பல வாரங்களுக்கு பிறகு கடந்த வாரம் முதல் இடத்துக்கு முண்டியடித்து முன்னேறி சென்ற சன் டிவியின் 'கயல்' சீரியல் இந்த வாரம் பழைய இடத்தையே வந்து அடைந்துவிட்டது. 9.23 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த வாரம் மட்டும் முதலிடத்தை கயல் சீரியலுக்கு விட்டு கொடுத்த 'சிங்கப்பெண்ணே' சீரியல் மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இடமான முதலிடத்தை 9.29 புள்ளிகளுடன் கைப்பற்றி வெற்றி கொடி நாட்டியுள்ளது.
இந்த டிஆர்பி ரேட்டிங் பட்டியல் 26வது வாரத்துக்கானது மட்டுமே. இது வரும் வாரங்களில் மாற்றம் காணலாம் அல்லது இதே இடத்தில் நிலைக்கலாம். வரும் வாரத்தின் நிலவரம் என்ன? எந்தெந்த சீரியல்களுக்கு இடையே போட்டி என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.