விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் பாட்டியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் மிகc சிறப்பாக களைகட்டுகிறது. ரவி கேக் செய்து எடுத்து வருகிறான். ரோகிணி பாட்டிக்கு மேக்கப் செய்து விடுகிறேன் என அழைத்துச் செல்கிறாள். 


"பாட்டி: உங்க அப்பா செய்யாத தப்புக்காக ஜெயிலில் இருப்பதாக அண்ணாமலை சொன்னான். அவர் எப்படி இருக்கிறார்?


ரோகிணி: ஆமா பாட்டி. பார்ட்னர்கள் செய்த தப்புக்காக அவர் ஜெயிலில் இருக்கிறார். கேஸ் நடந்துகிட்டு இருக்கு" எனச்சொல்லி சமாளிக்கிறாள். 


 



பாட்டி: மீனாவோட அம்மா, தங்கச்சி வருவாங்க. ஸ்ருதியோட வீட்டில் இருந்து கூட வருவாங்க. உங்க வீட்டில் இருப்பவர்களை தான் நான் இதுவரையில் பார்த்ததே இல்லை. உங்க மாமா ஒருத்தர் இருப்பாரே அவருக்கு போன் பண்ணு நான் பேசுறேன்" என பாட்டி சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள். எப்படியோ சொல்லி சமாளித்து விடுகிறாள். 


பார்வதி தூக்கமுடியாமல் டிவியை கொண்டு வருகிறார். மாமியாருக்காக விஜயா வாங்கிய பரிசு என சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பார்வதி தெரிந்த கடையில் வாங்கியதாகச் சொன்னதும், என்னுடைய ஷோரூமில் ஏன் வாங்கவில்லை என மனோஜ் கோபித்து கொள்கிறான்.  


முத்துவைக் காணவில்லை என மீனா பதட்டமாக இருக்கிறாள். முத்துவுக்கு என்ன ஆச்சு என பாட்டி அடிக்கடி கேட்க, மீனாவை முத்துவுக்கு போன் பண்ண சொல்கிறார் அண்ணாமலை. முத்து கார் ஓட்டுவதில் பிஸியாக இருப்பதால் மீனாவின் போனை எடுக்கவில்லை. அது தெரியாமல் விஜயா முத்துவை அவமானப்படுத்தி பேசுகிறாள். பாட்டி விஜயாவை கண்டிக்கிறார். 


பாட்டியின் பிறந்தநாளுக்கு பூஜை  செய்ய ஏற்பாடு செய்துள்ளார் அண்ணாமலை. ஐயர் வீட்டுக்கு வந்ததும் பூஜைகளை செய்து அம்மனின் புடவையை பாட்டிக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் பாட்டியை நீடுடி வாழ ஆசீர்வாதம் செய்கிறார்கள். பாட்டி அனைவருக்கும் ஆசீர்வாதம் செய்கிறார். எல்லோரும் ஜோடியாக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள மீனா மட்டும் தனியாக இருப்பதை நினைத்து சங்கடப்படுகிறாள். 


மீனா சமைத்துக் கொண்டு இருப்பதை பார்த்த பாட்டி “இந்த வீட்டில் நீ மட்டும் தான் எப்பவுமே வேலை செய்ய வேண்டுமா? விஜயாவும் மற்ற மருமகள்களும் எதுவும் செய்யமாட்டார்களா? நீ போய் முகத்தைக் கழுவி ரெடியாகு” என சொல்லி அனுப்பி வைக்கிறார்.


 



 


"பாட்டி: விஜயா நீ சமைக்க மாட்டியா? மீனா மட்டும் தான் பண்ணனுமா? ரோகிணியை சமைக்க சொல்லு. நீ அவளுக்கு துணையா உதவி செய்" என்கிறார். 


மீனாவை அழைத்து நகையெல்லாம் போட்டு கொள்ள சொல்கிறார் பாட்டி. மீனா திருதிருவென முழிக்கிறாள்.


"பாட்டி: என்ன விஜயா நீ இன்னும் மீனாவோட நகைகளை கொடுக்கலயா? 


விஜயா: என்கிட்டே எதுவும் இல்ல அத்தை. நான் எல்லாத்தையும் கொடுத்துட்டேன்" என்கிறாள். 


பாட்டி: மத்த பொண்ணுங்க எல்லாரும் நகை போட்டு இருக்காங்க இல்ல. நீ போய் ரெடியாகிட்டு நகையை எல்லாம் எடுத்து போட்டுக்கோ" என்கிறார்.  மீனா தயக்கத்துடன் செல்ல விஜயாவும் மனோஜூம் திருதிருவென முழிக்கிறார்கள். 


"மனோஜ்: நகையைப் பார்த்து பாட்டி கவரிங் நகைன்னு கண்டுபிடுச்சுட்டா என்ன பண்றது?


விஜயா: வாயை மூடுடா.." என சொல்லி விரட்டி விடுகிறாள். இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.