Maari Serial: சாஸ்திரிக்கு தெரிய வந்த ரகசியம்.. தாரா செய்த புது சூழ்ச்சி - மாரி சீரியல் அப்டேட்!

Maari Serial Today July 5th: சாஸ்திரி இது தான் மாரியோட உண்மையான குழந்தை என்று சொல்ல, தாரா அது ஏற்கனவே எனக்கு தெரியும் என்று ஷாக் கொடுக்கிறாள்.

Continues below advertisement

Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சங்கரபாண்டி மாரியின் குழந்தையை கொண்டு போய் ரூமுக்குள் ஒளித்து வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது அந்தத் தம்பதி கொண்டு வந்த குழந்தை மாரியின் குழந்தை இல்லை என்று தெரிய வந்ததும் சாஸ்திரி தன்னுடைய குழந்தையை தேட ஒரு ரூமுக்குள் குழந்தை இருப்பதை கவனிக்கிறார்.  அந்த ரூமுக்குள் நுழைய குழந்தையின் பக்கத்தில் கற்பூரம் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவர் இது தான் மாரியோட உண்மையான குழந்தை என்பதை புரிந்து கொள்கிறார், உடனே இந்த விஷயத்தை மாரியிடம் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து திரும்ப தாரா அங்கு நிற்கிறாள். 

சாஸ்திரி இது தான் மாரியோட உண்மையான குழந்தை என்று சொல்ல, தாரா அது ஏற்கனவே எனக்கு தெரியும் என்று ஷாக் கொடுக்கிறாள். சாஸ்திரி “அப்படினா மாரியிடம் சொல்லி இருக்கலாமே?” என்று கேட்க, “இந்தக் குழந்தையோட உயிருக்கு நிறைய ஆபத்து இருக்கு, அதனால் தான் நான் இதுவரைக்கும் உண்மையை சொல்லல, நீங்களும் சொல்ல வேண்டாம்” என்று சொல்ல, சாஸ்திரி தாராவை நம்பி சரி என்று ஒப்பு கொள்கிறார். 

இதையடுத்து மாரி தாராவை சந்தித்து “இந்தக் குழந்தையை தத்தெடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை? என் குழந்தை எங்க இருக்கு? எதுக்கு இந்த குழந்தையை தத்தெடுக்க கூடாதுனு தடங்கல் பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேள்வி கேட்கிறாள். மேலும் கூடிய சீக்கிரம் உண்மையைக் கண்டுபிடிக்கிறேன் என்றும் சவால் விடுகிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Samantha: மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, ஜெயிலில் தள்ள சொன்ன மருத்துவர்.. சமந்தா நீண்ட விளக்கப் பதிவு!

TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

Continues below advertisement