ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா (Veera). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கண்மணி ராகவனை நெருங்கிப் போக திடீரென ஏற்பட்ட விபத்தால் அவனுக்கு பழைய விபத்து விஷயம் நினைவுக்கு வர அவனை விட்டு விலகிக் கொண்ட நிலையில், இன்று நடத்தப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ராகவன் கார்த்திக் மற்றும் மாறன் என மூவரும் ஒன்றாக உட்கார்ந்து சரக்கடிக்க, போதையில் ராகவன் விபத்து பற்றி பேச தொடங்க மாறன் வாயைப் பற்றி அமைதியாக்கி விடுகிறான். இருந்தாலும் “ராகவன் கிட்ட உண்மைய சொல்லப் போறேன்” என்று சொல்லி கிளம்பி வர, எதிரில் ராமச்சந்திரன் வர, அவரிடம் கண்மணி எங்கே என்று கேட்க, அவர் ரூம்ல தான் இருக்கா என்று சொல்லி சிரித்துவிட்டு செல்கிறார். அதன் பிறகு ராகவன் கண்மணி தான் என நினைத்து உள்ளே வந்து அங்கிருக்கும் ஒரு பெண்ணிடம் அனைத்து உண்மைகளையும் சொல்கிறான்.
தொடர்ந்து வெளியே வர கண்மணி அங்கு நின்று கொண்டிருக்க, அப்போ உள்ளே இருந்தது யார் என்று குழப்பம் அடைகிறான். அந்தப் பெண் யார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கும் நிலையில், ராஜேஷின் அம்மா, மாறனை கத்தியால் குத்த வர, வீரா இதைப் பார்த்து தடுத்து வருகிறாள்.
இருப்பினும் மாறனுக்கு லேசான காயம் ஏற்பட, வீரா என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க?” என்று ராஜேஷ் அம்மாவைத் திட்டி அனுப்பி வைத்துவிட்டு மாறனின் காயத்திற்கு மருந்து போட்டு விடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Ajith: உழைப்பாளிக்கு வாய்ப்பு தந்த உழைப்பாளி! எஸ்.ஜே.சூர்யா முதல் முருகதாஸ் வரை: அஜித்தை வாழ்த்திய இயக்குநர்கள்!