Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராகவன், கண்மணி கல்யாண வேலைகள் விறுவிறுப்பாக நடக்க கண்மணியின் கர்ப்பம் பற்றி அறிந்த ராஜேஷ் அம்மா மண்டபத்திற்கு வேகவேகமாக ஓடி வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, ராஜேஷின் அம்மா மண்டபம் அருகே வந்து விடும் நேரத்தில் விபத்து ஒன்றில் சிக்கிக் கொள்ள, இங்கே கல்யாணம் நடந்து முடிகிறது. ராகவன் கண்மணி கழுத்தில் தாலி கட்டியதும் வீரா குடும்பம் சந்தோசப்பட ராமச்சந்திரனும் சந்தோஷமடைகிறார். மாறன் அப்பாவுக்கு பயந்து கூட்டத்தில் ஒருத்தனாக தூரத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்து வீரா வருத்தப்படுகிறாள். 


அடுத்து பொண்ணும் மாப்பிள்ளையும் கல்யாண கண்மணி வீட்டுக்கு வர, ஆரத்தி எடுக்கும் போது பிருந்தா மாமா “ஆரத்தி தட்டில் பணத்தை போடணும்” என்று சொல்ல, அந்த நேரம் அவனிடம் பணம் இல்லாததால் மோதிரத்தை கழட்டிப் போட, வள்ளி “போதும் அவங்களை உள்ள விடுங்க, விட்டா சொத்தையே எழுதி வாங்கிருவீங்க போல” என்று சீண்டி பார்க்கிறாள். 


எல்லாரும் உள்ளே செல்ல மாறன் மட்டும் தன்னந்தனியாக வெளியே நிற்க வீரா “நீயும் உள்ள வா, உன்னை யாரும் கொலைகாரனாக பார்க்க மாட்டாங்க” என்று சொல்லி அழைத்துச் செல்ல, ராமசந்திரன் “நீ எதுக்கு டா இங்க வந்த?” என்று சண்டையிடுகிறார். கண்மணி “இது என் வீடு, இங்க அவர் விருந்தாளி, அவரும் வரட்டும்” என்று சொல்கிறாள். 


பிறகு ராகவன் பாண்டியனின் போட்டோவைப் பார்த்து கண் கலங்க, மாறன் “இவனே காட்டி கொடுத்துடுவான் போல” என்று பதறி போய் நிலைமையை சமாளிக்கிறான். அடுத்து பிருந்தா எல்லாருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்க, மாறனுக்கு மட்டும் கொடுக்காமல் போக வீரா அவனுக்கும் கொடுடி என்று திட்டிக் கொடுக்க வைக்கிறாள். 


ஆனால் மாறன் “எனக்கு ஜிஞ்சர் வேண்டாம் ஆரஞ்ச் தான் வேண்டும், போய் எடுத்திட்டு வா” என்று சொன்னதும் பிருந்தா “இதுதான் இருக்கு” என்று சொல்ல, வீரா “அதான் அங்க இருக்கே, போய் எடுத்துட்டு வந்து கொடுடி” என்று திட்ட, பிருந்தாவும் எடுத்து வந்து கொடுக்க, வீரா “மிக்சிங் இல்லாமல் குடிக்கிறியா?” என்று கலாய்க்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Neeya Naana: நிலையான வேலையற்ற இளைஞர்கள்: பெற்றோரின் எதிர்பார்ப்பு.. அத்தியாவசிய தலைப்பில் நீயா நானா விவாதம்!


ஆஹா என்ன வரிகள் 15: துணையற்றவர்களின் மன வேதனையைச் சொல்லும் "நீ வருவாய் என!"