Neeya Naana: நிலையான வேலையற்ற இளைஞர்கள்: பெற்றோரின் எதிர்பார்ப்பு.. அத்தியாவசிய தலைப்பில் நீயா நானா விவாதம்!

Neeya Naana this week: இந்த வாரம் நீயா நானாவில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் தலைப்பு "வேலைக்கு போகாமல் சாக்குபோக்கு சொல்லும் இளைஞர்கள் vs எப்போ சொந்த காலில் நிக்க போற? எனக் கேட்கும் பெற்றோர்கள்"

Continues below advertisement

Neeya Naana This Week: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’. பல ஆண்டு காலமாக கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளது. இன்றும் மவுசு குறையாமல் மேலும் மேலும் மக்கள் மத்தியில் வரவேற்பை தான் பெற்று வருகிறது. பலதரப்பட்ட சுவாரஸ்யமான தலைப்புகள் குறித்த காரசாரமான விவாதங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. அதே நேரத்தில் ஒரு சில ஜாலியான விவாதங்களும் நடைபெறுவதுண்டு. 

Continues below advertisement


அந்த வகையில் வரும் வாரம் (மே 12ஆம் தேதி) நீயா நானா எபிசோடில் "வேலைக்குப் போகாமல் சாக்குபோக்கு சொல்லும் இளைஞர்கள் vs எப்போ சொந்த காலில் நிக்க போற? என கேட்கும் பெற்றோர்கள்" என்பது தான் தலைப்பு. இன்றைய இளைஞர்கள் ஒரு சிலர் மிகவும் அறிவாளிகளாக பொறுப்புள்ளவர்களாக எதிர்காலத்தை சரியாகத் திட்டமிடும் புத்திசாலிகளாக இருந்தாலும் பெரும்பாலான இளைஞர்கள் நிலையான வேலை கிடைக்காமல் அல்லது அமைத்துக் கொள்ளாமல் இருப்பதை அன்றாட வாழ்வில் பார்க்க முடிகிறது. 

நிலையான வேலைக்கு போகாமல் அல்லது ஒரு வேலையே தக்க வைத்து கொள்ள முடியாதவர்களாக அல்லது ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வேலைக்கு செல்வதை தட்டி கழிப்பவர்களாகேவே இருக்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் இருக்க, எதிர்பக்கம் அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். 

பிசினஸ் செய்ய வேண்டும், இயந்திரத்தனமான வாழ்க்கை, நண்பனுக்காக அவன் படித்த பட்டப்படிப்பை படித்தது என்பது இளைஞர்களின் வாதங்களாக இருக்க, பெற்றோர்கள் தங்களின் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார்கள். 

 

 

இந்தத் தலைப்பு இன்றைய சமூகத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இதன் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என பெற்றோரும், பெற்றோரின் விருப்பம் என்ன என்பதை பிள்ளைகளும் தெரிந்து கொள்ள ஒரு மேடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல கனவுகளுடன் இன்றைய காலகட்டத்து இளைஞர்கள் இருந்தாலும் அவர்களின் கனவுகள் அனைத்தும் சாத்தியப்படுமா என்ற நிதர்சன உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்போகிறது இந்த வார நீயா நானா நிகழ்ச்சி. 

Continues below advertisement
Sponsored Links by Taboola