Siragadikka Aasai Serial: ஜெயிலில் சிட்டி..முத்துவிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai Today Episode Written Update May 10: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Continues below advertisement

Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

Continues below advertisement

முத்து, ரவி, மீனா ஆகியோர் காவல் நிலையம் செல்கின்றனர். ”புத்திசாலிமா நீ. எங்க எப்டி விசாரிச்சா உண்மை தெரியும்னு தெரிஞ்சி பண்ணிருக்க” என்று இன்ஸ்பெக்டர் மீனாவை பார்த்து சொல்கிறார். இன்ஸ்பெக்டர் சிட்டியை காண்பித்து ”இவன் தானே அந்த வீடியோ எடுத்தது” என்று கேட்கிறார். அதற்கு மீனா, ”ஆமா சார் இந்த பொறுக்கி தான்” என்று சொல்கிறார். 

”இவரை பத்தி தப்பா வீடியோ எடுத்து போட்டு இருக்க” என்று இன்ஸ்பெக்டர் சிட்டியிடம் கோபமாக கேட்கிறார். அதற்கு சிட்டி, ”சார், எனக்கு எதுவும் தெரியாது சார்”” என்று சொல்கிறார். ”சிட்டி என்ன வேலை செஞ்சி இருக்கான் பாரு. இதுக்கு தான் அந்த பொறுக்கி பையன் கூட சுத்தாதனு சொன்னேன்” என்று மீனா சத்யாவை பார்த்து சொல்கிறார். 

அண்ணாமலை விஜயாவிடம் கோபமாக பேசுகிறார். மனோஜ் என்னாச்சி என்று கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ”ஒரு நல்லவன தண்டிச்சோம்ன்ற குற்ற உணர்வோட பேசுறேன்” என்று சொல்கிறார். பின் முத்து தான் குற்றம் செய்யவில்லை என்பதை ஆதாரத்துடன் வெளியிட்ட வீடியோவை அண்ணாமலை அனைவருக்கும் போட்டு காண்பிக்கின்றார். 

”ஒருத்தவனை கெட்டவனா நெனச்சி பார்த்தா அவன் செய்யுற எல்லாமே கெட்டதா தான் தெரியும்” என்று அண்ணாமலை சொல்கிறார். ”விஜயா, ஒரு பொண்ணு தன்னந்தனி ஆளா நின்னு தன் புருஷன் மேல இருந்த பழிய போக்கி இருக்கா” என்று அண்ணாமலை விஜயாவை பார்த்து சொல்கிறார். அதற்கு விஜயா, ”என்னாலலாம் முடியாது”” என்று விஜயா சொல்கிறார். அதற்கு அண்ணாமலை ”உன்னால முடியுமா முடியாதானு நான் கேட்கவே இல்லையே” என்கிறார்.

விஜயா, ரோகிணி, ஸ்ருதி ஆகியோர் சேர்ந்து மீனாவை அண்ணாமலை சொன்னபடி ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். அண்ணாமலை முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார். அதற்கு முத்து ”என்னப்பா நீ, என்கிட்ட போய் மன்னிப்பெல்லம் கேட்டுகிட்டு இருக்க” என்று சொல்கிறார். ”முத்துவுக்கு ஒரு நல்ல பொண்டாட்டியா நீ கெடச்சி இருக்க” என்று அண்ணாமலை மீனாவை பார்த்து சொல்கிறார். 

”இனிமே என்னை யாரும் குடிகாரன் பொண்டாட்டினு சொல்ல மாட்டாங்க இல்ல” என்று மீனா விஜயாவை பார்த்து கேட்கிறார்.  ரூமுக்குள் சென்றதும், முத்து, மீனாவிடம் ””நல்ல வேளை நீ என்னை காப்பாத்திட்ட” என்று சொல்கிறார்.  சத்யா சிட்டியை ஜெயிலில் சந்திக்கின்றார். பின் வீடியோவை நான் ட்ரெண்ட் செய்யவில்லை என சிட்டி சொல்கிறார். சத்யாவும் அதை நம்புகின்றார். பின் விரைவில் ஜாமினில் எடுத்து விடுவதாக சொல்லி விட்டு சத்யா செல்கிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola