Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராகவன், கண்மணி கல்யாண கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மாறன் ஆட்டம் போட்டு ராகவனை மண்டபத்திற்குள் அழைத்து வர, கண்மணி இதைப் பார்த்து கோபமாகி உள்ளே செல்ல, ராமசந்திரன் இதை கவனிக்கிறார், உடனே உள்ளே சென்று என்னாச்சு என்று கேட்க, “2 உயிரை கொன்னுட்டு மாறன் இப்படி சந்தோசமாக ஆடிட்டு இருப்பதை பார்க்கும் போது வயிறு எரியுது” என்று கோபப்படுகிறாள்.
உடனே ராமசந்திரன், ஆடிக் கொண்டிருக்கும் மாறனைப் பிடித்து அறைந்து “கல்யாணம் நடந்து முடியுற வரைக்கும் நீ யார் கண்ணிலும் பட கூடாது” என்று திட்டி அனுப்ப, “எல்லாரும் எதுக்கு அவனை அடிக்கறீங்க?” என்று கேட்கின்றனர். மாறன் வருத்தத்துடன் அங்கிருந்து வெளியே வருகிறான். இதனைத் தொடர்ந்து வீரா கண்மணியை சந்தித்து “நீ தான் ஏதோ சொல்லி இருக்கணும். அவன் ஏதோ ஒரு மூலையில் இருந்துட்டு போறான். நீ எப்படி என்னை விட்டு கொடுக்க மாட்டியோ அதே மாதிரி தான் ராகவனும்.. மாறனை விட்டு கொடுக்க மாட்டாரு, நீ மனசுல வன்மத்தை வளர்த்துக்காதே, அது நல்லது இல்ல” என்று திட்டுகிறாள்.
இதனையடுத்து மாறன் அப்பாவை சந்தித்து நான் “எதோ ஓரமா இருந்து என் அண்ணன் கல்யாணத்தை பார்த்துட்டு போயிடுறேன்” என்று பேச, ராமசந்திரன் எதுவும் பேசாமல் நகர்ந்து செல்கிறார். அதன் பிறகு மாறன் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்ல, ”என் அப்பா தானடா அடிச்சாரு. விடுங்க. நான் இல்லாமல் என் அண்ணன் கல்யாணம் நடக்குமா?” என்று பதில் சொல்கிறான்.
பிறகு அங்கு வரும் வீரா மாறனை பார்க்க அவன் என்ன வேண்டும் என்று கேட்க, ரோஸ் மில்க் வேண்டும் என்று சொல்கிறாள். அதெல்லாம் இங்கு கிடையாது என்று கலாய்த்து அனுப்புகிறான். பிறகு ராஜேஷின் அம்மா முகத்தை மூடிக்கொண்டு நிற்க, “உங்களுக்கு என்ன பாட்டி வேண்டும்? ரோஸ் மில்க் வேணுமா இருங்க எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே போக, ராஜேஷ் அம்மா காணாமல் போகிறார். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: 26 years of Jeans: தமிழ் சினிமாவின் அதிசயம்! பிரம்மாண்டத்தின் உச்சம்... அன்றே சாதித்த ஷங்கரின் ஜீன்ஸ்!