சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 24) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.



தர்ஷினிக்கு திருட்டுத்தனமாக கல்யாணம் செய்து வைக்க இருக்கும் மண்டபம் குறித்த தகவல்கள் ஜனனிக்கு கிடைத்து விடுகிறது. அதை வைத்த அந்த மண்டபத்துக்கு போன் செய்கிறாள் ஜனனி. "கல்யாண பொண்ணு தர்ஷினிக்கு பிரைடல் மேக்கப் போடுறதுக்காக எங்களை தான் அப்பாய்ண்ட் பண்ணி இருந்தாங்க. அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலே இருக்கே அந்த கல்யாண மண்டபம் தானே?" என ஜனனி போட்டு வாங்க அந்த மண்டப உரிமையாளரும் "ஆமாம் அங்க தான்" என சொல்கிறார். அதை கேட்டு ஜனனியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.




குணசேகரன் தர்ஷினி ரெடியாகி விட்டாளா என பார்ப்பதற்காக அவளின் ரூமுக்கு செல்கிறார். அங்கே தர்ஷினி கீர்த்தி பேசியதை யோசித்து பார்த்து இந்த திருமணத்தில் விருப்பமில்லை என சொல்லவும் டென்ஷனான குணசேகரன் "பேச்சை கேட்க மாட்டியா நீ. என் ஸ்டைலில் வைத்தியம் பண்ணா தான் அடங்குவீங்களா நீங்க?" என மிரட்டவும் தர்ஷினி அவரை பார்த்து முறைக்கிறாள். அதை பார்த்து குணசேகரன் கடுப்பாகிறார்.


 




ஜனனியும் மற்ற பெண்களும் அந்த மண்டபத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது இடையில் யாரோ வந்து வம்பு செய்கிறார்கள். அது யாரென பார்த்தால் கரிகாலனும் அவனது கூட்டாளியும். கார் டிரைவர் இறங்கி சென்று கரிகாலனுடன் சண்டை போடுகிறார். எங்கே உள்ளே இருக்கும் இவர்களை கரிகாலன் பார்த்துவிட போகிறானோ என நினைத்து  முகத்தை துணியால் மூடி கொள்கிறார்கள் ஜனனியும் மற்றவர்களும். சுற்றி இருந்தவர்கள் வந்து கரிகாலனை சமாதானம் செய்து வைக்கிறார்கள். அப்போது சந்தேகத்துடனே காருக்குள் இருப்பவர்களை பார்க்கிறான் கரிகாலன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் கதைக்களம்.


 





நேற்றைய எபிசோடில் வேகவேகமாக தர்ஷினி சித்தார்த் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என குணசேகரன் பிளான் செய்கிறார். ராமசாமியும் கிருஷ்ணாசாமியும் சித்தார்த்தை அழைத்து வந்துவிடுகிறார்கள். கீர்த்தி தர்ஷினியிடம் இந்த கல்யாணம் நடப்பதில் உனக்கு விருப்பம் இருக்கா இல்லையா என கேட்க தர்ஷினி குழம்பி போய் யோசிக்கிறாள். கல்யாணத்தை நடத்தி வைக்க மிரட்டி ஒரு ஐயரை ஏற்பாடு செய்து வைத்து இருக்கிறார்கள். அவர் தன்னுடைய மனைவிக்கு போன் செய்து தேவைப்படும் பொருட்களை வாங்கி வர சொல்கிறார். ஐயரின் மனைவி ஒரு சூப்பர் மார்க்கெட் சென்று பொருட்களை வாங்கும் போது திருட்டு கல்யாணம் பற்றி கடைக்காரரிடம் எதேச்சையாக சொல்ல அதை ஜனனியும் நந்தினியும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  கதைக்களம்.