Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


விஜயா கோயிலில் ரோகிணியை தோப்புக்கரணம் போட சொல்கிறார். பின் விஜயா ரோகிணியின் கையில் கற்பூரம் ஏற்றுகிறார்.ரோகிணி அலறி துடிக்கிறார். பின் அங்கபிரதட்சனம் செய்ய சொல்கிறார். "அவங்க அப்பாவ நெனச்சி இதெல்லாம் பண்றாங்க. அவங்க வேண்டுறது நடக்கும்" என்று மீனா சொல்கிறார். "அம்மா உன்னை திட்டி திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவாங்கனு பயந்தேன். பார்லர் அம்மா தான் டார்ச்சர் தாங்க முடியாம வீட்டை விட்டு ஓட போகுது" என்று முத்து மீனாவிடம் சொல்கிறார். "பார்லர் அம்மா, அம்மா கிட்ட வசமா மாட்டிக்கிச்சினு நினைக்குறேன்" என்று முத்து சொல்கிறார். 


"பாவம்மா அண்ணி இப்போ நிக்கவே முடியாம இருக்காங்க" என்று ரவி சொல்கிறார். அப்போது விஜயா ”நான் என்ன எனக்காகவா செய்ய சொல்றேன்” என்று சொல்கிறார். ”கடுமையான பரிகாரம் எல்லாம் செஞ்சி இருக்காங்க இல்ல. கண்டிப்பா நல்லது நடக்கும்” என மீனா சொல்கிறார். ”உங்க அப்பா கண்டிப்பா விடுதலை ஆயிடுவாரு” என ஐயர் சொல்கிறார். ”உங்க வார்த்தை பொய்யாக போகுது” என ரோகிணி மனதிற்குள் நினைக்கின்றார். ”ஐயர் உங்க அப்பா பேரை சொல்லுமா” என கேட்கிறார். நீண்ட நேரம் யோசித்து விட்டு தனசேகர் என்று சொல்கிறார். ”அதை சொல்ல ஏன்மா இவ்ளோ நேரம் யோசிக்குற” என்று ஐயர் கேட்கிறார்.


”ரோகிணி கை காலெல்லாம் வலிக்குது” என்று சொல்கிறார். பின் மனோஜ் கை கால் பிடித்து விடுகிறார். ”அப்போது விஜயா வந்து என்னடா பண்ற அவ கிட்டயே போக கூடாது” என்று சொல்கிறார்.  ”அவளுக்கு ஃபிஷ் சாப்பிடணுனு ஆசையா இருக்காம் என ரவி மீனாவிடம் சொல்கிறார்.  வீட்ல நான் வெஜ் சாப்பிட கூடாது என்று விஜயா சொல்கிறார்.


ஜீவா கோயிலுக்கு வெளியே காரில் இருந்து இறங்கி நின்று கொண்டு இருக்கிறார். அப்போது மனோஜ், கோயிலின் உள் இருந்து ஃபோன் பேசிக்கொண்டே வெளியே வருகிறார். அப்போது ஜீவா மனோஜை பார்த்து விடுகிறார். பின் காரினுள் சென்று உட்கார்ந்து கொள்கிறார். மனோஜ் ஃபோன் பேசிக் கொண்டே காரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கிறார். ஜீவா பயத்தில் நடுங்கி கொண்டே உள்ளே உட்கார்ந்து இருக்கின்றார். அதற்குள் முத்து வந்து காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து புறப்படுகிறார். பின் முத்து ”பார்லர் அம்மா உப்பு காரம் இல்லம தானே சாப்பிடணும்” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது.