தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.
அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டை நடத்தி போட்டியாளர்களின் தனித்திறமைகளை வெளியே கொண்டு வருகின்றனர்.
தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா மற்றும் ருத்ரேஷ் என நான்கு பேர் பைனலுக்கு தேர்வாகியுள்ள நிலையில் இந்த வாரம் மேலும் இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இப்படியான நிலையில் ரவுண்டில் சிறப்பாக பாடிய கனிஷ்கர் மற்றும் நிஷாந்த் கவின் தேர்வானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 6 போட்டியாளர்களுடன் வரும் டிசம்பர் 17-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. மேலும் நேரலையில் இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
மக்களின் ஓட்டுகள் மூலமாக வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளனர். வெற்றியாளருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Premalatha Vijayakanth: கேப்டன் மீது என்ன வன்மம்... வதந்தி பரப்பாதீங்க.. கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!