பாக்கியலட்சுமி


தொலைக்காட்சித் தொடர்களைப் பொறுத்தவரை தற்போது பல்வேறு குடும்பங்களை தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொடர் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi Serial). இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி நடித்து பல குடும்பங்களின் ஆதவரைப் பெற்றுள்ளார்.


மேலும் இந்தத் தொடரில் வில்லனாக பாக்கியலட்சுமியின் கனவர் கோபியாக சதீஷ்குமார் நடித்து வருகிறார். இவர்கள் தவிர்த்து  எஸ்.டி.பி ரோஸரி, சங்கராபரணம் ராஜலட்சுமி, விகாஸ் சம்பத், விஜய் விஷால், நேஹா மேனன், திவ்யா கனேஷ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.


கணவன், மகன், மகள், மாமனார், மாமியார் என அனைவருக்காகவும் உழைக்கும் பாக்கியலட்சுமி தன்னுடைய ஆசைகளை மூடி மறைக்கிறார். தனது குடும்பத்தினரிடம் அங்கீகாரத்தைப் பெற்று குடும்பத்திலும் தன்னுடைய சொந்த தொழிலிலும் முன்னேறும் ஒரு பெண்ணின் கதையே பாக்கியலட்சுமி தொடர். பலவிதமான திருப்பங்கள் , சுவாரஸ்யங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமித் தொடர்.


பாக்கியலட்சுமி இதுவரை


தற்போதைய நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டு பாக்கியலட்சுமியின் எதிர் வீட்டிற்கு குடிவந்துள்ளார். அடிக்கடி பாக்கியாவை சீண்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பாக்கியலட்சுமி.


அடுத்தகட்டமாக கோபியும் ராதிகாவும் பாக்கியாவின் வீட்டிற்கே குடியேறிவிடுகிறார்கள். இதனால் பாக்கியா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கோபமடைந்துள்ளார்கள். கோபி சொல்வதை எல்லாம் கேட்கும் அவரது அம்மா பாக்கியாவை திட்டிக் கொண்டே இருக்கிறார். கதை இப்படியாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.


ஹீரோவாகும் ஈஸ்வரியின் மகன்






இந்நிலையில், பாக்கியாவின் மாமியாராக நடிக்கும் நடிகை சங்கராபரணம் ராஜலட்சுமியின் மகன் ரோஹித் தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் படத்தின் பெயர் ‘பல்லகோட்டிக்கி பண்டகே ஒச்சிந்தி’. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், பாக்கியலட்சுமி தொடரின் பிற நடிகர்கள் ரோஹித்துக்கும் ராஜலட்சுமிக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், சின்னத்திரை ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.