Sandhya Raagam Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா ஆதாரத்தை காட்டி சிவராமன் குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, சிவராமன் குளத்தில் மூழ்கி குளித்து விட்டு புது துணி அணிந்து வீட்டிற்கு கிளம்பி வருகிறார். ஏற்கனேவே வீட்டுக்கு வந்த பார்வதி “மாயா மட்டும் ஆதாரத்தோட வரலைனா நீங்க அவருக்கு தண்டனை கொடுத்து நிறைவேற்றி இருப்பீங்க, இந்தக் குடும்பத்துக்காக உழைத்த அவருக்கு நீங்க கொடுக்கிறது இது தான்” என்று சத்தம் போடுகிறாள்.
இனிமே என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லி பையை எடுத்து கொண்டு வெளியே கிளம்புகிறாள். இந்த நேரத்தில் சிவராமன் வீட்டுக்கு வர, பார்வதி “இனிமே நாம இந்த வீட்டில் இருக்க வேண்டாம்” என்று சிவராமனை கூப்பிடுவது மட்டுமின்றி ரகுராமை பற்றி தப்பா பேச சிவராமன் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.
“யாரைப் பத்தி என்ன பேசுற? நான் தப்பு பண்ணி இருக்க மாட்டேன் என்பது என் அண்ணனுக்கு தெரியும், ஆனால் எனக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லாததால் தான் எதுவும் செய்ய முடியாமல் நின்னிட்டு இருந்தாரு. எங்கயோ நடந்த தப்புக்கு என் அண்ணனை தீர்ப்பு சொல்ல சொல்றாங்கன்னா என்ன அர்த்தம், அவர் சரியான தீர்ப்பை கொடுப்பாருனு நம்பிக்கை இருப்பதால் தான்.
அப்படிப்பட்ட என் அண்ணன் எனக்காக வாதாட முடியுமா? என்ன நடந்தாலும் நான் என் அண்ணனோட தான் இருப்பேன், உன்னால் இருக்க முடியாதுனா கிளம்பி போயிட்டே இரு” என்று சொல்லி உள்ளே வந்து ரகுராமிடம் பார்வதி பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார். பிறகு ரகுராம் சிவராமன் பேசியதை நினைத்து சந்தோசப்பட ஜானகி “அவர் உங்க தம்பி, அவரை நல்லபடியா வளர்த்திருக்கீங்க” என்று சொல்கிறாள்.
இதனையடுத்து மாயா போனை பயன்படுத்திக் கொண்டிருக்க ரகுராம் அதைப் பார்த்ததும் “மாயா இந்த போனை வச்சி தான் உங்க தம்பி தப்பு பண்ணலனு நிரூபிக்க முடிந்தது, இப்போ சொல்லுங்க இதை யூஸ் பண்ணலாமா? கூடாதா?” என்று கேட்க ரகுராம் கிரீன் சிக்னல் கொடுக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Siragadikka Aasai Serial: ஸ்ருதியின் அம்மாவிடம் அசிங்கப்பட்ட விஜயா.. சந்தோஷத்தில் ரோகிணி- சிறகடிக்க ஆசையில் இன்று
Ethirneechal serial : திரும்பவும் தர்ஷினியை காணவில்லையா? பதற்றத்தில் ஈஸ்வரி.. தொடரும் பரபரப்பு