Karthigai Deepam Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியாவின் அத்தை மாமாவாக நடிக்க சீரியல் ஆர்ட்டிஸ்ட் இருவர் வீட்டிற்கு வர இவர்கள் பேசுவதை மைதிலி ஒட்டு கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, மைதிலி இந்த விஷயத்தை மீனாட்சி மற்றும் தீபாவிடம் சொல்கிறாள். தீபா அபிராமியை பார்க்க உட்கார்ந்தவர்களுக்கு காபியில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்து “இதுல பேதி மாத்திரை கலந்து இருக்கேன், மரியாதையா ஓடி போய்டுங்க. இல்லனா அவ்வளவு தான்” என்று மிரட்டுகிறாள். 


இதனைத் தொடர்ந்து அபிராமிக்கு ஐஸ்வர்யாவின் கர்ப்பம் குறித்து நினைவுக்கு வர, அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறாள். ஐஸ்வர்யா எங்கே போறோம் என்று கேட்க, “நீ கர்ப்பமா இருக்கேல.. அதான் ஹாஸ்பிடல் போய் வழக்கமான செக்கப் செய்துட்டு வரலாம். குழந்தை ஆரோக்கியமா இருக்கானு பார்க்கலாம்” என்று சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். 


கிடைக்கும் சைடு கேப்பில் ரியாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறாள். அவளும் ஒரு ஐடியாவை சொல்ல அந்த ஐடியா பெயிலியர் ஆகிறது. இதையடுத்து அபிராமி ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர டாக்டர் அவளை செக் செய்து கர்ப்பமில்லை என்ற உண்மையை உடைக்கிறார். இதனால் ஐஸ்வர்யா பேரதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Siragadikka Aasai Serial: ஸ்ருதியின் அம்மாவிடம் அசிங்கப்பட்ட விஜயா.. சந்தோஷத்தில் ரோகிணி- சிறகடிக்க ஆசையில் இன்று


Ethirneechal serial : திரும்பவும் தர்ஷினியை காணவில்லையா? பதற்றத்தில் ஈஸ்வரி.. தொடரும் பரபரப்பு