Siragadikka Asai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


ரோகிணி ஸ்ருதியை பார்த்து "இவ்ளோ சீக்கிரமா வந்துட்டிங்க?" என கேட்கிறார். அதற்கு ஸ்ருதி "ஏன் நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா?" என கேட்கிறார். "நான் ஏங்க அப்டி நெனைக்கப் போறேன்" என்று ரோகிணி சொல்கிறார். "ஆனா முத்து வந்து உங்க வீட்ல சாரி கேட்பாருனு நெனச்சேன்" என்று ரோகிணி சொல்ல, "அவரு ஏங்க சாரி கேட்கணும்" என மீனா கேட்கிறார். "ஸ்ருதியோட அப்பாவ அடிச்சதுக்கு" என ரோகிணி சொல்கிறார். ”அப்போ என்னை பேசினதுக்கு ஸ்ருதியோட அப்பா சாரி கேட்பாரா” என மீனா கேட்கிறார். ”அவங்க சொல்றதும் சரி தானே என் அப்பாவும் தப்பு பண்ணி இருக்கரு இல்ல” என ஸ்ருதி சொல்கிறார். ”மீனாவுக்காக அவரு செஞ்ச தப்ப மறந்துட்டேன்” என்றும் ஸ்ருதி சொல்கிறார். 


மனோஜ், முத்து, ரவி மாடியில் நின்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஸ்ருதி கால் செய்து ரவியை உடனே கீழே வர சொல்கிறார். ரோகிணியும் மனோஜிக்கு கால் செய்து உடனே கீழே வர சொல்கிறார். பின் முத்து மீனாவுக்கு கால் பண்ணி ”அவங்க ரெண்டு பேரும் கால் பண்ணி கூப்பிடுறாங்க நீ ஏன் என்னை கூப்பிடல” என கேட்கிறார். 


மீனா, ”ரெண்டு மூனு இடத்துல பூ கொடுக்க வேண்டி இருக்கு. நான் போய் குடுத்துட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அப்போது ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வருகிறார். அந்த நேரம் பார்த்து கஸ்டமர் வந்து பூ கேட்கிறார். விஜயா பூவை முழம்போட்டு கொடுக்கிறார். இதை பார்த்து ஸ்ருதியின் அம்மா ”நீங்களும் நல்லாதான் முழும் போடுறிங்க. உங்களுக்கு இந்த வேலை ஈசியா வருது” என்று சொல்கிறார். உடனே ரோகிணி இதை பார்த்து ”நல்லா வாங்கி கட்டிக்கட்டும். எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு” என மனதிற்குள் நினைக்கின்றார். 


ஸ்ருதியின் அம்மா ஒரு 200 ரூபாய்க்கு பூ கொடுங்க என விஜயாவிடம் வாங்கி செல்கிறார். ஸ்ருதி, விஜயாவிடம் ”மீனாவுக்கு ஹெல்ப் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டிங்க. பூக்கடையில யாருமே இல்ல பாருங்க. போய் பார்த்துக்கோங்க” என சொல்கிறார். ’என்ன பார்த்தா இவங்களுக்கு எல்லாம் எப்படி தெரியுது. என்னை பூ கட்டுறவங்கனு சொல்லிட்டு போறாங்க” என விஜயா ரோகிணியிடம் சொல்கிறார் . இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.