Raghava Lawrence: தளபதி நண்பன்.. தலைவர் குரு.. ரியாலிட்டி ஷோவில் லியோ விமர்சனம் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் ஜெயிலர் படம் பற்றியும், லியோ படம் பற்றியும் விமர்சனத்தையும் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் ரெட்ரோ ஹிட் ரவுண்ட் நடைபெற உள்ளது.

Continues below advertisement

70 மற்றும் 80-களில் ஹிட்டான ரெட்ரோ பாடல்களைத் தேர்வு செய்து பாட உள்ளனர், நடுவர்கள், பார்வையாளர்கள்,  போட்டியாளர்கள் என அனைவரும் இதே கெட்டப்பில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக ராகவா லாரன்ஸ், சந்தோஷ் நாராயண் ஆகியோர் பங்கேற்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் தன் படங்களின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதன்படி ராகவா லாரன்ஸ் ஜெயிலர் படம் பற்றியும், லியோ படம் பற்றியும் விமர்சனத்தை சொல்ல, “என்ன ரெண்டு படத்தையும் விட்ட கொடுக்காமல் பேசறீங்க” என்று கேள்வி எழுப்பி உள்ளனர். உடனே அவர் “தலைவர் என் குரு, தளபதி என் நண்பன்” என பதில் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப்பட தொடர்ந்து பிரைன் ட்யூமர் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் அதில் இருந்து மீண்டு வந்த விஷயத்தைப் பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் ஒரு கட்டை நாற்காலி தன்னுடைய வாழ்க்கையில் ஏற்ப குடுத்திய மாற்றங்கள் குறித்து பதிவு செய்துள்ளார். ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட பட்ட கஷ்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்த ரவுண்டில் ராகவ் பிரசாத் மற்றும் பிரவீன் ஆகியோர் எலிமினேட் ஆனதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியிலேயே மிகவும் சுவாரஸ்யமான ரவுண்டாக இந்த வார எபிசோட் இருக்கும் என நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சரிகமப நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 7 மணிக்கும், ஞாயிறு கிழமை மாலை 6.30 மணிக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

மேலும் படிக்க: Killers Of The Flower Moon Review: கருப்புத் தங்கத்துக்காக நிகழ்ந்த கொடூரங்கள்.. ‘கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்’ பட விமர்சனம்!

Vikraman Wife: 5 ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக இருக்கும் இயக்குநர் விக்ரமன் மனைவி.. சொத்தை வித்து மருத்துவ செலவு பார்க்கும் சோகம்!

Continues below advertisement