தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி மணமேடையில் இருக்க தமிழ் பாப்பா விநாயகர் சிலை முன்பு நின்று என் பிரண்ட்டுக்கு கல்யாணம் நடக்கக்கூடாது என வேண்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கல்யாண மண்டபத்தில் ஆதியை தாலி கட்ட சொல்ல கையில் தாலியுடன் நிற்கும் ஆதி வேறு கட்டத்தில் தாலியை கீழே போட்டு விடுகிறான். இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைந்து ஏன் தாலி கட்ட மாற்ற என்று கேட்க எனக்கு வேறொரு பொண்ணு பிடிச்சிருக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
சாரதா ஸ்வேதா என் வீட்டு மருமக நீ தாலி கட்டி தான் ஆகணும் என்று சொல்லியும் ஆதி மறுப்பு தெரிவிக்க இனி நீ என் புள்ளையே இல்லை என்று சொல்லி ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். செய்வதறியாது தவித்து நிற்கிறான் ஆதி.
அதைத்தொடர்ந்து பாரதி, லதா மற்றும் தமிழ் பாப்பா மூவரும் கிளம்பி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்க தமிழ் பாப்பாவும் லதாவும் பசிக்குது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆதி காரில் வந்து இறங்கி இவர்களை அழைத்துக் கொண்டு செல்கிறான். பாரதி லதா ஆகியோர் ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்க ஆதி பதில் சொல்ல முடியாமல் இருக்கிறான்.
தமிழ் பாப்பா ஃபிரண்ட் நான் கேட்டா சொல்லுவீங்க தானே யார் அந்த பொண்ணு என்று கேள்வி கேட்க இவன் மிரர் வழியாக பார்க்க அதில் பாரதியின் முகம் தெரிகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க