Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாராவும் சங்கரபாண்டியும் கோயிலுக்கு வந்து ஏற்பாடுகளை செய்து வைத்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement


அதாவது தாரா, சங்கரபாண்டி என இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து அந்தப் பெண்ணிடம் சாமியாடி குழந்தையை தத்தெடுக்கலாம் என்று சொல்ல வேண்டும் என்று பிளான் போட்டு வைத்திருந்தனர். ‌  ஆனால் குடும்பத்தினர் நாகாத்தம்மாவே முடிவை சொல்லட்டும் என்று சொல்லும் நிலையில் தாரா ஏற்பாடு செய்த பெண் சாமியார் தயாராக, அதற்கு முன் ஹாசினிக்கு சாமி வந்து குழந்தையை தத்தெடுக்கலாம் என்று சொல்கிறார். 


அதன் பிறகு ஒரு நாகம் வந்து பூவை எடுத்துக் கொடுக்க அதிலும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று வருகிறது. இதையடுத்து இவர்கள் சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு இங்கு நடந்த விஷயங்களை சொல்கின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க: Weapon Movie Review: சூப்பர் ஹியூமனாக கலக்கினாரா சத்யராஜ்?.. வசந்த் ரவியின் வெப்பன் திரைப்பட விமர்சனம்..!


Anjaamai movie Review: நீட் தேர்வு அவலத்தை தோல் உரித்ததா அஞ்சாமை? ரசிகர்கள் மனதை வென்றதா? முழு திரைவிமர்சனம்