எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (ஜூன்.07) எபிசோடில் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஒவ்வொருவரும் சாட்சி சொல்லி வருகிறார்கள். ரேணுகா மற்றும் நந்தினி பேசுகையில் “இவரால் நாங்கள் எங்களின் சுயத்தை இழந்துவிட்டோம். இந்த முறையும் அவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படாவிட்டால் சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமல்ல எங்களின் தன்னம்பிக்கையே அழிந்துவிடும். இது அவர் செய்த பாவங்களுக்கு கிடைக்கும் தண்டனை அல்ல, அவரைப் போல பெண்களை அடிமையாக நடத்தும் ஆணாதிக்கவாதிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும் சவுக்கடி” எனக் கூறுகிறார்கள்.


 



அடுத்ததாகப் பேச வந்த ஜனனி அப்பத்தாவை அநியாயமாகக் கொன்று விட்டார் என வருத்தப்பட்டு சொல்லிக்கொண்டே இருக்கையில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட அப்பத்தா நேரில் வந்து நிற்கிறார். அவரை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். அப்பத்தா குணசேகரன் தனக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்ததை வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். இது பாதுகாப்புக்காக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது மட்டுமல்லால் பாம் வெடித்து கார் சிதறுவது போல ட்ராமா போட்டது பற்றியும் சொல்கிறார். ஜீவானந்தம் தான் அப்பத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினார் என்றும் தெரிவித்தார் அப்பத்தா.

அனைவரின் சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களை விசாரித்த பிறகு நீதிபதி குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அவரின் குற்றங்களுக்கு உடந்தையாய் இருந்த வீரசங்கிலி, கிள்ளிவளவன் மற்றும் மதுரைக்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்படுகிறது. இது தான் நேற்றைய எதிர்நீச்சல் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜூன் 8) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 



குணசேகரனை ஜெயிலுக்கு போலீஸ் அழைத்து செல்ல கதிர், ஞானம், தர்ஷன் சென்று கட்டிப்பிடித்து அழுகிறார்கள். "அண்ணனுக்கு ஒண்ணுன்னா உடனே வந்தீங்க பாத்தீங்களா அதுலேயே நான் ஜெயிச்சுட்டேண்டா" என தம்பிகளை கட்டிக்கொண்டு அழுகிறார் குணசேகரன். அவர் செய்யும் ட்ராமாவை பெண்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சக்தி மட்டும் தயக்கத்தில் போகாமல் நிற்கிறான்.


 




அப்பத்தாவிடம் சென்ற குணசேகரன் "படிச்சவ ஜெயிச்சிட்ட... முட்டா பய ஒழைச்சவன் தோத்து போய் நிற்கிறேன்" என அப்பவும் தன்னை ஒரு தியாகி போலவே பேசிக்கொண்டு இருக்கிறார். பெண்கள் அனைவரிடமும் சென்று "இப்போ நான் உங்களை விட்டு விலகிட்டேன். உங்களுக்கு பிடிச்சபடி வாழ்ந்துக்கோங்க... ஆனா" என சொல்லி ஏதோ சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இருப்பினும் அவர் கிளம்பும் போது அப்பத்தா, தம்பிகள் மற்றும் தங்கையின் கண்கள் கலங்குகின்றன. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.