Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மார்க் சூரியாவின் பிடியில் இருந்து தப்பித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, தாரா சாஸ்திரிக்கு போன் செய்து யாரோ ஒருவர் பேசுவது போல குழந்தையைத் தத்து கொடுத்தால் அந்த குழந்தையை உயிரோட பார்க்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். “அந்தக் குழந்தையை திருப்பி வாங்கிடு” என்று மிரட்டி போனை வைக்கிறாள். 


இதனால் பதறிப்போகும் சாஸ்திரி, நேராக சூர்யாவின் வீட்டுக்கு வந்து தனது குழந்தையை கொடுத்து விடுங்கள் என்று கேட்க, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அவரை சமாதப்படுத்த முயற்சி செய்ய சாஸ்திரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதனால் வேறு வழியின்றி குழந்தையை ஒப்படைகின்றனர். 


குழந்தைக்கு தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால் சாஸ்திரி தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்து கிளம்பத் தயாராக, வீட்டில் சங்கரபாண்டி “இனிமே இந்த பங்க்ஷன் நடக்க போறது இல்ல, அப்புறம் எதுக்கு காத்திருக்கணும்? மண்டபத்தை கேன்சல் பண்ணிடலாம், அந்த பணமாவது திரும்ப கிடைக்கும்” என்று சொல்ல எல்லாரும் சங்கரபாண்டியை திட்டுகின்றனர். 


இதையடுத்து மாரி சூர்யாவிடம் “ஹஸ்பண்ட் எனக்கு ஒரே முறை குழந்தையைப் பார்க்கணும்” என்று சொல்ல சூர்யா சாஸ்த்திற்கு போன் செய்ய சாஸ்திரி சூர்யா என்று தெரிந்ததும் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஊருக்கு கிளம்பி செல்கிறார். 


இதையடுத்து சூர்யாவும் மாரியும் நேரில் கிளம்பி வர சாஸ்திரி வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Actor Ranjith: “சுயசாதியை விமர்சித்த பாலச்சந்தர், இன்றைய இயக்குநர்களுக்கு தைரியமில்லை” - நடிகர் ரஞ்சித் கருத்து


Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!